அருப்புக்கோட்டையில் ரூ.1.90 லட்சம் பறிமுதல்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பறக்கும் படையினரால் ரூ.1.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அருப்புக்கோட்டை தேர்தல் பறக்கும் படை குழுவினர் எஸ்.பி.கே. கல்லூரி சாலையில் சோதனை செய்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து சோதனையிட்டனர். ஆவணங்கள் இன்றி ரூ.1.90 லட்சம் வைத்திருந்தது தெரிந்தது. மேலும் விசாரித்ததில் மானாமதுரை பிருந்தாவனம் தெருவை சேர்ந்த வெங்கடேஸ்வரன் 26, ஜெகதீஷ் 23, இருவரும் காந்தி நகர் பிள்ளையார் கோவில் தெரு தனியார் நிறுவனத்தில் பணியாளராக உள்ளனர் என்பதும்,பிடிபட்ட தொகையை காரியாபட்டி, அருப்புக்கோட்டை, புலியூரான், மண்டபசாலை கிராம மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் வசூல் செய்து கொண்டு செல்வதாக கூறினர். ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Read More

ஸ்ரீவில்லிபுத்துாரில் ரூ.3.21 கோடி பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் வாகனசோதனையின் போது உரிய ஆவணங்களின்றி வேனில் கொண்டு வரபட்ட ரூ.3.21 கோடியை அதிகாரிகள் கைப்பற்றினர். ஸ்ரீவி.,தொகுதி நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் கண்ணன் ,எஸ்.ஐ.,இலக்கியமுத்து குழுவினர் கொல்லம் நெடுஞ்சாலையில் நேற்று மாலை 4:00 மணிக்கு வாகன தணிக்கை செய்தனர்.விருதுநகரிலிருந்து ஏ.டி.எம்.களில் பணம் வைக்க சென்ற வேனை சோதனையிட்டதில் ரூ.3.21 கோடி இருந்தது . ரூ.20 லட்சத்திற்கு மட்டுமே ஆவணங்கள் இருந்துள்ளது. ரூ. 3 கோடியே ஒரு லட்சத்திற்கு உரிய ஆவணங்களில்லை.ரூ.3.1 கோடியை பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்துார் சார்கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Read More

பரிதவிப்பு! தேர்தல் நேரத்தில் இணைய சர்வர்கள் கோளாறு …. அதிகாரிகள், கட்சியினர் படும்பாடு திண்டாட்டம்

விருதுநகர், : மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் இணைய சர்வர்களில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதால் அதிகாரிகள், கட்சியினர் படும்பாடு சொல்லி மாளாது. போதாக்குறைக்கு அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுவதால் தேர்தல் பணிகள் முற்றிலும் முடங்கி வருகிறது.மாவட்டத்தில் ஏழு தொகுதிகளுக்கும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். மார்ச் 19 வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. அதிகாரிகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு இணைய சர்வர்களின் வேகம் இல்லை. இணைய தள வேகத்தின் திறன் குறைவாக இருப்பதால் அவ்வப்போது சர்வர்களில் கோளாறு ஏற்படுகிறது. அன்றாடம் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் விவரம், கட்சிகளின் பிரசாரங்களுக்கு இணைய வழியில் அனுமதி வழங்குதல், பறக்கும்படை, கண்காணிப்பு படையினரின் வாகன சோதனையில் சிக்கும் கணக்கில் வராத ரூ.பல லட்சம்…

Read More

ராஜபாளையம் செல்ல பாலம்

ராஜபாளையம் : ”நக்கனேரியிலிருந்து ராஜபாளையம் செல்வதற்கு பாலம்,தார்ச்சாலை அமைக்கப்படும்,” என, ராஜபாளையம் தொகுதி தி.மு.க., வேட்பாளரான தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., உறுதி அளித்தார். நேற்று மாலை 5:00 மணிக்கு ராஜபாளையம் தொகுதிக்குட்பட்ட சுந்தரராஜபுரம், கணபதி சுந்தரநாச்சியார்புரம், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், இளந்திரைகொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், அயன் கொல்லங்கொண்டான், நக்கனேரி, தெற்கு வெங்காநல்லுார், சிதம்பராபுரம் மற்றும் பட்டியூர் கிராமம் வரை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது: உள்ளூர் வேட்பாளரான நான் உங்களுக்கு நன்கு தெரிந்தவர். இந்த மண்ணின் மைந்தன். உங்கள் வீட்டுப்பிள்ளை. என்னை எங்கும் எப்போதும் சந்திக்கலாம். சுந்தரராஜபுரம் ஊராட்சி கோரிக்கையான ரேஷன் கடைக்கு எம்.எல்.ஏ., நிதியிலிருந்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. செட்டியார்பட்டியிலிருந்து அம்மையப்பபுரம் வழியாக இளந்திரை கொண்டானுக்கு தார்ச்சாலைக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. நக்கனேரியிலிருந்து ராஜபாளையம் செல்வதற்கு பாலம்,தார்ச்சாலை வேண்டும் என்ற பொது மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். கிருஷ்ணாபுரம், நக்கனேரி உள்ளிட்ட…

Read More

மாட்டு வண்டியில் பயணித்த கலெக்டர்

வத்திராயிருப்பு : நுாறுசதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி வத்திராயிருப்பில் கலெக்டர் கண்ணன் மாட்டுவண்டியில் பயணித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதை முன்னிட்டு வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சியில் இயந்திரங்களில் மின்னணு ஓட்டுபதிவு செய்யும் முறை குறித்து விளக்கமளிக்கபட்டது. மகளிர் சுய உதவிக் குழுவினரால் வரையபட்ட வரைபடங்களை பார்வையிட்டார். கலெக்டருக்கு தேர்தல் ராக்கி அணிவிக்கபட்டது. மாட்டுவண்டியில் பயணித்து வாக்காளர்களை நேரில் சந்தித்து நுாறுசதவீத ஓட்டுபதிவிற்கான அழைப்பிதழை வழங்கினார். டி.ஆர்.ஓ., மங்கள ராமசுப்பிர மணியன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மகளிர் திட்ட அலுவலர் தனபதி, உதவி திட்ட அலுவலர்கள் கிேஷார், வசுமதி, வளர்மதி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் கண்ணன், சிவ அருணாச்சலம், அன்பழகன், பி.டி.ஓ.,க்கள் திருநாவுக்கரசி, சீனிவாசன் பங்கேற்றனர்.

Read More

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

விருதுநகர் : விருதுநகரில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு தொடர்பான முதல் பயிற்சி வகுப்பு மாவட்டத்தின் ஏழு தொகுதிகளிலும் நடந்தது. மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும் 2370 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் 11,376 ஆசிரியர்கள், அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி ராஜபாளையம் பி.ஏ.சி.எம்.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்துார் வி.பி.எம்.எம்., நர்சிங் கல்லுாரி, சாத்துார் எஸ்.ஆர்.,நாயுடு கல்லுாரி, சிவகாசி எஸ்.எப்.ஆர்.,கல்லுாரி, விருதுநகர் கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லுாரி, திருச்சுழி சி.இ.ஓ.எ.,கல்லுாரி மையங்களில் நடந்தது. ஓட்டுப்பதிவு பணிகள்,ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு குறித்து மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். இதை கலெக்டர் கண்ணன், டி.ஆர்.ஓ., மங்கள ராம சுப்பிரமணியன், சப் கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தனர்.

Read More

வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி

சிவகாசி : அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணித்திட்டம், உடற்கல்வித்துறை, செஞ்சிலுவைச்சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம், மனிதச் சங்கிலி, தொடர் ஓட்டம், மினிமாரத்தான் நடந்தது. ஊர்வலத்தை கல்லுாரி முதல்வர் காந்திமதி துவக்கி வைத்தார். சப் கலெக்டர் அலுவலகத்திலிருந்து டவுன் போலீஸ் ஸ்டேஷன் வரை மனித சங்கிலி நடந்தது. தொடர்ந்து தொடர் ஓட்டம், மினி மாரத்தான் நடந்தது. சப் கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். தாசில்தார் ராமசுப்பிரமணியன், ஆர்.ஐ., கிருஷ்ணமூர்த்தி, வி.ஏ.ஓ., பாண்டியன், கல்லுாரி விலங்கியல் துறைத்தலைவர் ராமதாஸ், தாவரவியல் துறை தலைவர் வைரமுத்து, தமிழ்த்துறை தலைவர் கிளிராஜ், வரலாற்றுத் துறை தலைவர் குமார் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கணேச முருகன், உடற்கல்வி இயக்குனர் சாந்தி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Read More