அருப்புக்கோட்டையில் ரூ.1.90 லட்சம் பறிமுதல்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பறக்கும் படையினரால் ரூ.1.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அருப்புக்கோட்டை தேர்தல் பறக்கும் படை குழுவினர் எஸ்.பி.கே. கல்லூரி சாலையில் சோதனை செய்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து சோதனையிட்டனர். ஆவணங்கள் இன்றி ரூ.1.90 லட்சம் வைத்திருந்தது தெரிந்தது. மேலும் விசாரித்ததில் மானாமதுரை பிருந்தாவனம் தெருவை சேர்ந்த வெங்கடேஸ்வரன் 26, ஜெகதீஷ் 23, இருவரும் காந்தி நகர் பிள்ளையார் கோவில் தெரு தனியார் நிறுவனத்தில் பணியாளராக உள்ளனர் என்பதும்,பிடிபட்ட தொகையை காரியாபட்டி, அருப்புக்கோட்டை, புலியூரான், மண்டபசாலை கிராம மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் வசூல் செய்து கொண்டு செல்வதாக கூறினர். ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

Leave a Comment