ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

விருதுநகர் : விருதுநகரில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு தொடர்பான முதல் பயிற்சி வகுப்பு மாவட்டத்தின் ஏழு தொகுதிகளிலும் நடந்தது.

மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும் 2370 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் 11,376 ஆசிரியர்கள், அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி ராஜபாளையம் பி.ஏ.சி.எம்.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்துார் வி.பி.எம்.எம்., நர்சிங் கல்லுாரி, சாத்துார் எஸ்.ஆர்.,நாயுடு கல்லுாரி, சிவகாசி எஸ்.எப்.ஆர்.,கல்லுாரி, விருதுநகர் கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லுாரி, திருச்சுழி சி.இ.ஓ.எ.,கல்லுாரி மையங்களில் நடந்தது.

ஓட்டுப்பதிவு பணிகள்,ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு குறித்து மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். இதை கலெக்டர் கண்ணன், டி.ஆர்.ஓ., மங்கள ராம சுப்பிரமணியன், சப் கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தனர்.

Related posts

Leave a Comment