மாட்டு வண்டியில் பயணித்த கலெக்டர்

வத்திராயிருப்பு : நுாறுசதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி வத்திராயிருப்பில் கலெக்டர் கண்ணன் மாட்டுவண்டியில் பயணித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இதை முன்னிட்டு வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சியில் இயந்திரங்களில் மின்னணு ஓட்டுபதிவு செய்யும் முறை குறித்து விளக்கமளிக்கபட்டது. மகளிர் சுய உதவிக் குழுவினரால் வரையபட்ட வரைபடங்களை பார்வையிட்டார். கலெக்டருக்கு தேர்தல் ராக்கி அணிவிக்கபட்டது. மாட்டுவண்டியில் பயணித்து வாக்காளர்களை நேரில் சந்தித்து நுாறுசதவீத ஓட்டுபதிவிற்கான அழைப்பிதழை வழங்கினார். டி.ஆர்.ஓ., மங்கள ராமசுப்பிர மணியன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மகளிர் திட்ட அலுவலர் தனபதி, உதவி திட்ட அலுவலர்கள் கிேஷார், வசுமதி, வளர்மதி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் கண்ணன், சிவ அருணாச்சலம், அன்பழகன், பி.டி.ஓ.,க்கள் திருநாவுக்கரசி, சீனிவாசன் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment