ராஜபாளையம் செல்ல பாலம்

ராஜபாளையம் : ”நக்கனேரியிலிருந்து ராஜபாளையம் செல்வதற்கு பாலம்,தார்ச்சாலை அமைக்கப்படும்,” என, ராஜபாளையம் தொகுதி தி.மு.க., வேட்பாளரான தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., உறுதி அளித்தார்.

நேற்று மாலை 5:00 மணிக்கு ராஜபாளையம் தொகுதிக்குட்பட்ட சுந்தரராஜபுரம், கணபதி சுந்தரநாச்சியார்புரம், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், இளந்திரைகொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், அயன் கொல்லங்கொண்டான், நக்கனேரி, தெற்கு வெங்காநல்லுார், சிதம்பராபுரம் மற்றும் பட்டியூர் கிராமம் வரை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது: உள்ளூர் வேட்பாளரான நான் உங்களுக்கு நன்கு தெரிந்தவர். இந்த மண்ணின் மைந்தன்.

உங்கள் வீட்டுப்பிள்ளை. என்னை எங்கும் எப்போதும் சந்திக்கலாம். சுந்தரராஜபுரம் ஊராட்சி கோரிக்கையான ரேஷன் கடைக்கு எம்.எல்.ஏ., நிதியிலிருந்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. செட்டியார்பட்டியிலிருந்து அம்மையப்பபுரம் வழியாக இளந்திரை கொண்டானுக்கு தார்ச்சாலைக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. நக்கனேரியிலிருந்து ராஜபாளையம் செல்வதற்கு பாலம்,தார்ச்சாலை வேண்டும் என்ற பொது மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

கிருஷ்ணாபுரம், நக்கனேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பேவர் பிளாக் அமைத்து கிராம சாலைகளை மேம்படுத்தி உள்ளேன். தி.மு.க.,வின் ஆட்சி அமைந்தவுடன் தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன், என்றார்.ஒன்றிய தலைவர் சிங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் ராஜா அருண்மொழி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment