வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி

சிவகாசி : அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணித்திட்டம், உடற்கல்வித்துறை, செஞ்சிலுவைச்சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம், மனிதச் சங்கிலி, தொடர் ஓட்டம், மினிமாரத்தான் நடந்தது.

ஊர்வலத்தை கல்லுாரி முதல்வர் காந்திமதி துவக்கி வைத்தார். சப் கலெக்டர் அலுவலகத்திலிருந்து டவுன் போலீஸ் ஸ்டேஷன் வரை மனித சங்கிலி நடந்தது. தொடர்ந்து தொடர் ஓட்டம், மினி மாரத்தான் நடந்தது. சப் கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். தாசில்தார் ராமசுப்பிரமணியன், ஆர்.ஐ., கிருஷ்ணமூர்த்தி, வி.ஏ.ஓ., பாண்டியன், கல்லுாரி விலங்கியல் துறைத்தலைவர் ராமதாஸ், தாவரவியல் துறை தலைவர் வைரமுத்து, தமிழ்த்துறை தலைவர் கிளிராஜ், வரலாற்றுத் துறை தலைவர் குமார் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கணேச முருகன், உடற்கல்வி இயக்குனர் சாந்தி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related posts

Leave a Comment