என்றும் விசுவாசமாக இருப்பேன் : சாத்தூர் அ.ம.மு.க., வேட்பாளர் ராஜவர்மன் உருக்கம்

சாத்துார்: ”மக்களுக்காக நான் என்றும் விசுவாசமாக இருப்பேன்,”என சாத்துார் தொகுதி அ.ம.மு.க.,வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ., கூறினார்.தொகுதிக்குட்பட்ட எஸ்.ராமலிங்காபுரம், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, அய்யனாபுரம், கீழராஜகுலராமன் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: நான் லாரி, கார் டிரைவராக, தொழிலாளியாக இருந்தவன். ஒரு தொழிலாளி படும் கஷ்டம் இன்னொரு தொழிலாளிக்குதான் தெரியும். இப்பகுதி தொழிலாளர்கள், விவசாயிகள் நிறைந்த பகுதி. குறிப்பாக பேண்டேஜ் தொழிலாளர்கள் படும் கஷ்டத்தை நன்கு அறிந்தவன். எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்ற நாளில் இருந்து இப்பகுதிக்கு தேவையான ரோடு, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்து தந்துள்ளேன். பேண்டேஜ் விசைத்தறி தொழில் மேலும் வளர்ச்சி பெற, இத் தொழிலுக்கு தேவையான வரி சலுகைகளை அளிக்க சட்டசபை,முதல்வரிடம் வலியுறுத்தினேன். உங்களுக்காக நான் என்றும் விசுவாசமாக இருப்பேன். குடிநீர் மேல்நிலைத்தொட்டி, குளியல்தொட்டி, மினிபவர் பம்பு, தெருவிளக்குகளை எம்.எல்.ஏ., நிதியில் செய்து தந்துள்ளேன்.…

Read More

சிவகாசியில் தி.மு.க., கூட்டணி கூட்டம்: காங்., வேட்பாளர் அசோகன் வெற்றி பெற வேண்டுகோள்

சிவகாசி: ‘சிவகாசி காங்., வேட்பாளர் அசோகன் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்,” என, மாவட்ட தி.மு.க.,செயலாளர்கள் சாத்துார்ராமச்சந்திரன் ,தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்தனர்.சிவகாசியில் நடந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி காங்., வேட்டாளர் அசோகனை ஆதரித்து எம்.எல்.ஏ., சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது: காங்., ஐகூட்டணி கட்சி என நினைக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வெற்றி பெற உழைக்க வேண்டும். 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜி.அசோகன் வெற்றி பெற வேண்டும்.குட்டி ஜப்பான் சிவகாசி குட்டிச்சுவராக மாறிவிட்டது. ரோடு சரியில்லை, குடிநீர் இல்லை. சிவகாசியில் நாம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிதான். ஏனெனில் அவர் இங்கு ஒன்றுமே செய்யவில்லை. காங்., வேட்பாளர் ஜி.அசோகன் சிவகாசி மக்களுக்காக உண்மையாக உழைப்பார்,என்றார்.தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.,: சிவகாசி மக்களின், தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர் வேட்பாளர்…

Read More

சட்டசபை வந்ததும் வெளியேறி விடுவார்: தி.மு.க., வேட்பாளர் குறித்து அமைச்சர் நக்கல்

ராஜபாளையம்: ”சட்டசபை வரும் தி.மு.க., வேட்பாளரான இங்குள்ள எம்.எல்.ஏ., சட்டசபை துவங்கியதும் வெளியேறி விடுவார்.தொகுதி பிரச்னைகள் குறித்து பேசமாட்டார்,” என, ராஜபாளையம் அ.தி.மு.க., வேட்பாளரான அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார். ராஜபாளையத்தில் பல்வேறு சமுதாய தலைவர்களை சந்தித்து ஓட்டு சேகரித்த அவர், தளவாய்புரம், முகவூர், செட்டியார்பட்டி, மீனாட்சி புரம், பஞ்சம்பட்டி கிராம பகுதி சமுதாய நிர்வாகிகள், பொது மக்களை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது அவர் பேசியதாவது: ராஜபாளையம்தொகுதி மக்கள் அளிக்கும் வரவேற்பு 1972 காலங்களில் எம்.ஜி.ஆர்., ஜெ., போன்ற தலைவர் களுக்கு அளிப்பது போல் ஆரவாரமாக உள்ளது. 10 ஆண்டுகாலம் அமைச்சராக இருந்தபோது ராஜபாளையம் கிராமப்புறங்களுக்கு முக்கூடல் குடிநீர் திட்டம், நகர்ப்பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். ரூ.50 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.செட்டியார்பட்டி, சேத்துார் பேரூராட்சி…

Read More