சட்டசபை வந்ததும் வெளியேறி விடுவார்: தி.மு.க., வேட்பாளர் குறித்து அமைச்சர் நக்கல்

ராஜபாளையம்: ”சட்டசபை வரும் தி.மு.க., வேட்பாளரான இங்குள்ள எம்.எல்.ஏ., சட்டசபை துவங்கியதும் வெளியேறி விடுவார்.தொகுதி பிரச்னைகள் குறித்து பேசமாட்டார்,” என, ராஜபாளையம் அ.தி.மு.க., வேட்பாளரான அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார். ராஜபாளையத்தில் பல்வேறு சமுதாய தலைவர்களை சந்தித்து ஓட்டு சேகரித்த அவர், தளவாய்புரம், முகவூர், செட்டியார்பட்டி, மீனாட்சி புரம், பஞ்சம்பட்டி கிராம பகுதி சமுதாய நிர்வாகிகள், பொது மக்களை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது அவர் பேசியதாவது: ராஜபாளையம்தொகுதி மக்கள் அளிக்கும் வரவேற்பு 1972 காலங்களில் எம்.ஜி.ஆர்., ஜெ., போன்ற தலைவர் களுக்கு அளிப்பது போல் ஆரவாரமாக உள்ளது. 10 ஆண்டுகாலம் அமைச்சராக இருந்தபோது ராஜபாளையம் கிராமப்புறங்களுக்கு முக்கூடல் குடிநீர் திட்டம், நகர்ப்பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். ரூ.50 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.செட்டியார்பட்டி, சேத்துார் பேரூராட்சி பகுதிகளில் சாலைகளில் பேவர் பிளாக் பதித்து அமைத்து கொடுத்துள் ளேன்.நான் கொண்டு வந்த திட்டங்களை தற்போதைய தி.மு.க., எம்.எல்.ஏ., நான் தான் கொண்டு வந்தேன் , என பொய்யாக கூறிவருகிறார். சட்டசபை வந்தவுடன் தி.மு.க., எம்.எல்.ஏ., வெளியேறி விடுவார். இங்குள்ள பிரசனைகள் பற்றி பேசவே மாட்டார், என்றார்.

Related posts

Leave a Comment