சிவகாசியில் தி.மு.க., கூட்டணி கூட்டம்: காங்., வேட்பாளர் அசோகன் வெற்றி பெற வேண்டுகோள்

சிவகாசி: ‘சிவகாசி காங்., வேட்பாளர் அசோகன் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்,” என, மாவட்ட தி.மு.க.,செயலாளர்கள் சாத்துார்ராமச்சந்திரன் ,தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்தனர்.சிவகாசியில் நடந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி காங்., வேட்டாளர் அசோகனை ஆதரித்து எம்.எல்.ஏ., சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது: காங்., ஐகூட்டணி கட்சி என நினைக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வெற்றி பெற உழைக்க வேண்டும். 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜி.அசோகன் வெற்றி பெற வேண்டும்.குட்டி ஜப்பான் சிவகாசி குட்டிச்சுவராக மாறிவிட்டது. ரோடு சரியில்லை, குடிநீர் இல்லை. சிவகாசியில் நாம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிதான். ஏனெனில் அவர் இங்கு ஒன்றுமே செய்யவில்லை. காங்., வேட்பாளர் ஜி.அசோகன் சிவகாசி மக்களுக்காக உண்மையாக உழைப்பார்,என்றார்.தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.,: சிவகாசி மக்களின், தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர் வேட்பாளர் ஜி.அசோகன். இவர் பட்டாசு தொழிலுக்காக கடுமையாக போராடுவார். சிவகாசி தொகுதி கடந்த 10 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் அடையவில்லை. அனைவரும் காங்.,வெற்றி பெற உழைக்க வேண்டும், என்றார்.

Related posts

Leave a Comment