ஸ்ரீவி.,யில் சிக்கிய ரூ.3.21 கோடி விடுவிக்க வருமானவரி அனுமதி

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில வேனில் கொண்டுவரபட்டு பிடிபட்ட ரூ.3.21 கோடி குறித்த விசாரணையில், வங்கிகளின் பணம் என்பது தெரியவர அதை விடுவிக்க வருமானவரித்துறை அனுமதியளித்துள்ளது. மார்ச் 17ல் ஸ்ரீவில்லிபுத்துாரில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் கண்ணன் தலைமையிலான குழுவினர் வாகன கண்காணிப்பில் மதுரையிலிருந்து வந்த வங்கி ஏ.டி.எம்.களில் பணம் வைக்கும் குழு வேனில் உரிய ஆவணமின்றி ரூ.3.21 கோடி கொண்டு வரபட்டது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.வருமானவரித்துறையினர் அன்றிரவே ஸ்ரீவி., வந்து விசாரித்தனர். ஸ்டேட் பாங்க், கனரா பேங்க் உயரதிகாரிகள் விளக்கமளித்ததையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப ஒப்படைக்க வருமானவரித்துறை அனுமதி அளித்துள்ளது.

Read More

7 தொகுதியில் 23 பேர் வாபஸ்; 149 பேர் போட்டி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த 23 பேர் வாபஸ் செய்தனர். தற்போது களத்தில் 149 பேர் உள்ளனர். மார்ச் 12 முதல் 19 வரை வேட்புமனு தாக்கல் நடந்தது. 7 தொகுதிகளில் பெறப்பட்ட 259 மனுக்களில் 87 தள்ளுபடி செய்யப்பட்டு 172 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் நேற்று 23 பேர் வாபஸ் பெற்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் 8 வாபஸ் பெற கட்சியினர் 9, சுயேச்சைகள் 6 என 15 பேர் போட்டியில் உள்ளனர். சிவகாசியில் 31 வேட்பு மனுக்களில் ஐந்து வாபஸ் பெற 12 கட்சியினர், 14 சுயேச்சைகள் 26 பேர் போட்டியில் உள்ளனர். ராஜபாளையத்தில் 20 ல் ஆறு பேர் வாபஸ் பெற கட்சிகள் 7, சுயேச்சைகள் 7 என 14 பேர்…

Read More

இது தேவையா! வெளிச்சமின்றி உள்ள பேரிக்கார்டுகளால் விபத்து

சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைகளை ஆக்கிரமித்துள்ள பேரிக்கார்டுகள் இரவில் வெளிச்சமின்றி உள்ளதால், வேகமாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்களை சந்திக்கின்றன.இவற்றை அகற்ற சம்பந்தப்பட்டு துறையினர் நடவடிக்கை எடுக்க மேண்டும். வாகனங்களின் வேகமாக செல்லவே நான்குவழிச்சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இதன் நோக்கத்தை சீர் குலைக்கும் வகையில் நெடுஞ்சாலை ,போலீசார் ஆங்காங்கே செக்போஸ்ட் போன்று பேரிக்கார்டுகள் வைத்துள்ளனர். வளைவுகள் குறித்து ஆங்காங்கு எச்சரிக்கை பலகைள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் விபத்தை தடுப்பதற்காக ரோட்டின் மேல் பேரிக்கார்டுகள் வைக்கப்படுவதாக போலீசார கூறுகின்றனர் .இதற்கு மாவட்ட நிர்வாகம் வேறு ஆதரவு கரம் நீட்டுகிறது. கலெக்டர் அலுவலகம், ஆர்.ஆர்.நகர், சாத்துார், சூலக்கரை, உப்பத்துார் விலக்கு என குறிப்பிட்ட 10 கிலோ மீட்டர் துாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பேரிக் காடுகள் உள்ளன .தற்போது தேர்தல் பிரசாரம் களைகட்டி வருவதால் ரோட்டில் வாகனங்கள்…

Read More