வேட்பாளர் இன்று (மார்ச் 24)

விருதுநகர் பாண்டுரங்கன் (பா.ஜ.,): விருதுநகர் நகராட்சி 25, 26, 29, 30 வார்டுகள், சிவகாசி வடக்கு ஒன்றிய பகுதிகள். சீனிவாசன் (தி.மு.க.,): நகராட்சி வார்டுகள், சத்திரரெட்டியபட்டி பகுதிகள். தங்கராஜ் (அ.ம.மு.க.,): விருதுநகர் நகர் பகுதிகள், பெரிய பேராலி, சிவஞானபுரம் . செல்வக்குமார் (நாம் தமிழர் கட்சி): நகராட்சி 7, 8, 9 வார்டுகள், வடமலாபுரம், ஆனைக்குட்டம், மத்தயசேனை. சாத்துார் ரவிச்சந்திரன் (அ.தி.மு.க.): ராஜபாளையம் கிழக்கு ஒன்றியம். ராஜவர்மன் (அ.ம.மு.க): ராஜபாளையம் கிழக்கு ஒன்றியம். பாண்டி (நாம் தமிழர்): ஏழாயிரம்பண்ணை, சிப்பிப்பாறை, குகன் பாறை, சங்கரபாண்டியாபுரம், சாத்துார் ஒன்றிய கிராமங்கள். மாரிக்கண்ணன் (புதிய தமிழகம்): வெம்பக்கோட்டை ஒன்றியம். ஸ்ரீவில்லிபுத்துார் மான்ராஜ் (அ.தி.மு.க.,): வத்திராயிருப்பு ஒன்றிய பகுதிகள். மாதவராவ் (காங்கிரஸ்): ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி வார்டுகள். சங்கீதப்பிரியா ( அ.ம.மு.க.,): ஸ்ரீவில்லிபுத்துார் நகர் 1 முதல் 5 வார்டுகள். அபிநயா (நாம்…

Read More

மருத்துவமனையில் வேட்பாளர்; தந்தைக்காக மகள் பிரசாரம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இவருக்கு ஆதரவாக அவரது மகள் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இரவது மகளான சென்னையை சேர்ந்த திவ்யாராவ் 33,தந்தை மருத்துவமனையில் இருந்தாலும் அவரது பிரசாரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில், அவர் இல்லாத குறையை நிறைவேற்றி வருகிறார். தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

Read More

சரக்கு வாகனங்களில் ஆட்கள்; கடிவாளம் போடுமா மாவட்ட நிர்வாகம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி வருவது தொடர்கிறது. வருவோரை எச்சரிப்பதோடு, வாகனங்கள் மீது வட்டார போக்குவரத்து துறை, போலீசார் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிலை கண்காணிப்பு குழு, பறக்கும் படைகள் மூலம் பண பட்டுவாடாவை தடுக்கும் முழுநேர பணி நடந்து வருகிறது. இருப்பினும் பண பட்டுவாடாவும், பிரசார கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை திரட்டுவதும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. பிரசாரங்களின் போது ஆட்களை அழைத்து வருவதற்கு சரக்கு வாகனங்கள் பயன்படுத்துவது தற்போது அதிகரித்து வருகிறது. சட்டசபை தேர்தல் என்பதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பிரசாரம் போது கட்சியினர் தங்கள் பலத்தை காண்பிக்க கிராமங்களில் இருந்து ஆட்களை திரட்டி சரக்கு வாகனங்களில் அழைத்து…

Read More

ஓட்டளிப்பை வலியுறுத்தி ‘ ஹீலியம்’ பலுான்

சிவகாசி : 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி சிவகாசி பஸ் ஸ்டாண்டில் ஹூலியம் பலுான் பறக்கவிடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார்வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஹூலியம் பலுானில் 100 சதவீதம் ஓட்டளிப்போம், ஓட்டளிப்பது நமது உரிமை, எங்கள் ஓட்டு விற்பனைக்கல்ல போன்ற வாசகங்கள் எழுதப்பட்டு பறக்கவிடப்பட்டது.திட்ட இயக்குநர் ஜெயக்குமார், நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்மோகன், ராமராஜ் கலந்து கொண்டனர்.

Read More

மத்திய ஆணையம் மூலம் அரசு வேலை; மத்தியரசை குற்றம்சாட்டி சாத்தூரில் வைகோ பிரசாரம்

சாத்தூர் : ”இந்தியா முழுவதும் எந்த மாநிலத்தில் அரசு வேலை என்றாலும் மத்தியில் ஆணையம் அமைத்து அதன் மூலம் வேலைக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என மத்தியமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதாக,” ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார். சாத்துாரில் ம.தி.மு.க., வேட்பாளர் ரகுராமை அதிரித்து அவர் பேசியதாவது: இந்த தேர்தல் சேவை செய்வதற்கா ,மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்கா என்ற கேள்வியுடன் நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் மத்தியமைச்சர் அமித்ஷா மோசமான ஒரு சட்டத்தை கொண்டு வருவேன் என்று கூறியிருக்கிறார். அதாவது இந்தியா முழுவதும் எந்த மாநிலத்தில் அரசு வேலை என்றாலும் மத்தியில் ஆணையம் அமைத்து அதன் மூலம் அரசு வேலைக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார். தமிழகத்தில் உள்ள 9 லட்சம் இளைஞர்கள், இளம் பெண்கள் வேலைவாய்பின்றி அவதிப்படுகின்றனர். அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்.மத்தியரசு விவசாயிகள் பற்றி கவலைப்படாத அரசாக உள்ளது. வேளாண் சட்டத்திற்கு…

Read More

தவறாதீங்க! ஓட்டளிப்பு என்பது ஒவ்வொருவரின் கட்டாயம்; கட்சிகளிடம் பணம் வாங்குவதையும் தவிர்ப்போம்

அருப்புக்கோட்டை : மாவட்டத்தில் ஒவ்வொருவரும் கட்டாயமாக ஓட்டளித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறை வேற்ற வேண்டும்.இதோடு கட்சியினர் தரும் பணத்திற்காக ஓட்டளிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலின் போது பொதுமக்கள் அனைவரும கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்களும் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம், கையெழுத்து இயக்கம், பிட் நோட்டீஸ் என வாக்களிக்க பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் 100 சதவீத ஓட்டுப்பதிவு என்பது எந்த தேர்தலிலும் இல்லை. பொதுமக்களுக்கு தங்கள் ஓட்டின் உரிமை, அதனுடைய ‘பவர்’ வாக்களிப்பதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். படித்தவர்களில் கூட பலர் ஓட்டளிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் உள்ளனர். தங்களுக்கு உரிய ஓட்டை பயன்படுத்தினால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் உரிமையாக பிரச்னைகள் குறித்து பேச முடியும். ஓட்டின் மதிப்பு தெரியாமல்…

Read More