ஓட்டளிப்பை வலியுறுத்தி ‘ ஹீலியம்’ பலுான்

சிவகாசி : 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி சிவகாசி பஸ் ஸ்டாண்டில் ஹூலியம் பலுான் பறக்கவிடும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார்வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஹூலியம் பலுானில் 100 சதவீதம் ஓட்டளிப்போம், ஓட்டளிப்பது நமது உரிமை, எங்கள் ஓட்டு விற்பனைக்கல்ல போன்ற வாசகங்கள் எழுதப்பட்டு பறக்கவிடப்பட்டது.திட்ட இயக்குநர் ஜெயக்குமார், நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்மோகன், ராமராஜ் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment