மருத்துவமனையில் வேட்பாளர்; தந்தைக்காக மகள் பிரசாரம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இவருக்கு ஆதரவாக அவரது மகள் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இரவது மகளான சென்னையை சேர்ந்த திவ்யாராவ் 33,தந்தை மருத்துவமனையில் இருந்தாலும் அவரது பிரசாரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில், அவர் இல்லாத குறையை நிறைவேற்றி வருகிறார். தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

Related posts

Leave a Comment