மூடிய பட்டாசு ஆலையில் வெடிவிபத்து தொழிலாளி பலி

சாத்துார்:சாத்துார் அருகே வீ.சுந்தரலிங்கபுரத்தில் மூடப்பட்டு கிடந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி பலியானார். சிவகாசியை சேர்ந்தவர் ஆனந்த் 35. இவருக்கு சொந்தமான எம்.ஆர். பட்டாசு தொழிற்சாலை சாத்துார் அருகே வீ.சுந்தரலிங்கபுரத்தில் உள்ளது. டி.ஆர்.ஓ., லைசென்ஸ் பெற்ற இந்த ஆலை யில் 10 அறைகள் உள்ளன. மத்தாப்பு, தரைச்சக்கரம் போன்ற பட்டாசு தயாரிக்கப் பட்டது. இங்கு கடந்த இரண்டு மாதமாக உற்பத்தி இல்லாமல் மூடப்பட்டிருந்தது. நேற்று ஆலையை திறந்து கன்னிசேரியை சேர்ந்த தொழிலாளி சங்கரலிங்கம் 30, கெமிக்கல் அறையில் மத்தாப்பு வெடிக்கான மருந்து கலவை தயாரித்தார். அப்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. தொழிலாளி உடல் சிதறி பலியானார். 2 அறைகள் தரைமட்டமாகின. ஆலையில் வேறு யாரும் பணிபுரிந்தனரா என அப்பையநாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். மண் அள்ளும் இயந்திரம் மூலம் கட்டட இடிபாடுகள் அகற்றும் பணி…

Read More

இலவசங்களால் ஏழ்மையை ஒழிக்க முடியாது

அருப்புக்கோட்டை : இலவசங்களால் ஏழ்மையை ஒழிக்க முடியாது.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற நிரந்தர திட்டத்தை செயல்படுத்துங்கள்”, என ம.நீ.ம.,தலைவர் கமல் பேசினார். அருப்புக்கோட்டையில் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது, ” ஓட்டிற்கு ஆயிரம், 2 ஆயிரம் கொடுக்காதீர்கள். மக்கள் பயன்படும் வகையில் 5 லட்சம் கொடுங்கள். 3 தலைமுறையாக தமிழகம் சீரழிந்து விட்டது. கமல் ஹெலிகாப்டரில் வந்து செல்கிறார். ஏது பணம் என்று கேள்வி கேட்கின்றனர் அது என் சொந்த பணம். நீங்கள் மக்கள் வரி பணத்தில் வந்து செல்கிறீர்கள். நலத்திட்டம் என்ற பெயரில் பணத்தை கொடுத்து விட்டு, அதை டாஸ்மாக் மூலம் கறந்து விடுகிறீர்கள். இலவசங்களால் ஏழ்மையை ஒழிக்க முடியாது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு போன்ற நிரந்தர திட்டங்களை செயல்படுத்துங்கள். மனித வளத்தை மேம்படுத்தினாலே போதுமானது. இந்த தாடி வேண்டுமா, அந்த தாடி (வெள்ளை தாடி) வேண்டுமா?…

Read More

நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பங்குனி பவுர்ணமி வழிபாட்டிற்காக நாளை (மார்ச் 26) முதல் மார்ச் 29 வரை 4 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவசியம் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்யவேண்டும். வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப் படுவதால் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.இரவில் மலையில் தங்குவதற்கு அனுமதி கிடையாது போன்ற கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அலட்சியம்! நான்கு வழிச்சாலை பாலங்களில் சேதமடைந்த தடுப்புகள்; திருப்பங்களில் நடக்கும் விபத்துக்களால் அதிகரிக்குது பலி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பாலங்கள், திருப்பங்களில் வைக்கப்பட்ட தடுப்புகள் சேதமடைந்து காணப்படுவதால் நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. மாவட்டத்தில் 2019, 2020ஐ காட்டிலும் தற்போது விபத்து எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தேர்தல் பணிகள் சூடுபிடித்தாலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டியது எப்படி உள்ளாட்சி கடமையோ அது போல் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரும் ரோடுகளில் உள்ள தங்கள் பராமரிப்பு பணிகளை நிவர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம். விருதுநகர் டூ சாத்துார் செல்லும் நான்கு வழிச்சாலையில் மாவட்ட விளையாட்டு அரங்கம், பட்டம்புதுார், எட்டூர்வட்டம், இ.குமாரலிங்கபுரம் என பல இடங்களில் பாலங்கள், திருப்பங்களில் உள்ள தடுப்புகள் உடைந்து அபாய நிலையில் உள்ளன. இரவில் வேகமாக செல்லும் வாகனங்கள் திருப்பங்களில் பிரதிபலிப்பான்களும் இல்லாதது,தடுப்புகள் இல்லாததால் தடுமாறுகின்றன. இதனால் ஏற்படும் விபத்துக்களால் உயிர் பலிகளும் அதிகரிக்கின்றன.…

Read More

தொகுதி வாரியாக அலுவலர்கள் பணி பிரிப்பு

விருதுநகர் : சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி பிரிக்கும் பணி கலெக்டர் கண்ணன் தலைமையில் நடந்தது. தேர்தல் பொது பார்வையாளர்கள் தேவேந்திரகுமார் சிங் குஷ்வாஹா, பிரபான்ஷூ குமார் ஸ்ரீவஸ்தவ், பினித்தா பெக்கு, சுரேந்திர பிரசாத் சிங் முன்னிலை வகித்தனர். இதில் தேர்வானவர்களுக்கான பயிற்சி வகுப்பு அந்தந்த தொகுதிகளில் நாளை (மார்ச் 26) நடக்கிறது. டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், சப் கலெக்டர் தினேஷ்குமார், தேர்தல் தாசில்தார் அய்யக்குட்டி பங்கேற்றனர்.

Read More