நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பங்குனி பவுர்ணமி வழிபாட்டிற்காக நாளை (மார்ச் 26) முதல் மார்ச் 29 வரை 4 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவசியம் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்யவேண்டும். வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப் படுவதால் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.இரவில் மலையில் தங்குவதற்கு அனுமதி கிடையாது போன்ற கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment