மூடிய பட்டாசு ஆலையில் வெடிவிபத்து தொழிலாளி பலி

சாத்துார்:சாத்துார் அருகே வீ.சுந்தரலிங்கபுரத்தில் மூடப்பட்டு கிடந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி பலியானார்.

சிவகாசியை சேர்ந்தவர் ஆனந்த் 35. இவருக்கு சொந்தமான எம்.ஆர். பட்டாசு தொழிற்சாலை சாத்துார் அருகே வீ.சுந்தரலிங்கபுரத்தில் உள்ளது. டி.ஆர்.ஓ., லைசென்ஸ் பெற்ற இந்த ஆலை யில் 10 அறைகள் உள்ளன. மத்தாப்பு, தரைச்சக்கரம் போன்ற பட்டாசு தயாரிக்கப் பட்டது. இங்கு கடந்த இரண்டு மாதமாக உற்பத்தி இல்லாமல் மூடப்பட்டிருந்தது. நேற்று ஆலையை திறந்து கன்னிசேரியை சேர்ந்த தொழிலாளி சங்கரலிங்கம் 30, கெமிக்கல் அறையில் மத்தாப்பு வெடிக்கான மருந்து கலவை தயாரித்தார்.

அப்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. தொழிலாளி உடல் சிதறி பலியானார். 2 அறைகள் தரைமட்டமாகின. ஆலையில் வேறு யாரும் பணிபுரிந்தனரா என அப்பையநாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். மண் அள்ளும் இயந்திரம் மூலம் கட்டட இடிபாடுகள் அகற்றும் பணி நடந்தது .

Related posts

Leave a Comment