பயிற்சி பட்டறை

சிவகாசி : அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி விலங்கியல் துறை சார்பில் சுயதொழில் வேலைவாய்ப்பு முனைவோர்களுக்கும், கல்லுாரி அருகாமையிலுள்ள விவசாயிகளுக்கும் மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் முன்னிலை வகித்தார்.ராஜபாளையம் விவசாய பொருள் தொழில் முனைவோர் சீனிக்குமார் பயிற்சி அளித்தார்.

Read More

வேட்பாளர்கள் இன்று

விருதுநகர் பாண்டுரங்கன் (பா.ஜ.,): விருதுநகர் நகராட்சி 31, 32, 33, 36 வார்டுகள், ரோசல்பட்டி பகுதிகள். சீனிவாசன் (தி.மு.க.,): விருதுநகர் நகராட்சி 20, 21 வார்டுகள். தங்கராஜ் (அ.ம.மு.க.,): அன்னை சிவகாமிபுரம், மேலரத வீதி, பாவாலி, செங்குன்றாபுரம் . மணிமாறன் (ச.ம.க.,): என்.ஜி.ஓ.,காலனி, வடமலைக்குறிச்சி, சத்திரரெட்டியபட்டி . செல்வக்குமார் (நாம் தமிழர் கட்சி): கூரைக்குண்டு, செவல்பட்டி, அழகாபரி, மீசலுார். குணசேகரன் (புதிய தமிழகம்): முக்கிய பிரமுகர்களை சந்தித்தல் விருதுநகர் நகர் பகுதிகள். சிவகாசி லட்சுமி கணேசன் (அ.தி.மு.க.,) : முதல்வர் பழனிசாமியுடன் தேர்தல் பிரசாரம் , சிவகாசி பஸ் ஸ்டாண்டு ஜி.அசோகன் (காங்.,): முல்லை நகர், பொதகை நகர், கந்தபுரம் காலனி, பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப், பி.எஸ்.ஆர்., ரோடு, பெரியாண்டவர் காலனி. சாமிக்காளை (அ.ம.மு.க.,): சிவகாசி சித்துராஜபுரம், அய்யனார் காலனி . முகுந்தன் (மக்கள் நீதி…

Read More

982 ஓட்டுச்சாவடிகளில் வீல்சேர், சாய்தளம்; மாற்றுத்திறனாளிகள் செயலியால் வசதி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பர்சன் வித் டிஸ்ஏபிலிட்டி’ செயலி மூலம் 982 ஓட்டுச்சாவடிகளில் வீல்சேர், சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் குறித்த தேவைகள் கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டுப்பதிவு விவரங்களை ‘பர்சன் வித் டிஸ்ஏபிலிட்டி’ எனும் செயலி மூலம் அறியலாம். இதில் புதிய வாக்காளர்களாக பதிவு, வீல்சேர் தேவை, ஓட்டுச் சாவடியில் உள்ள குறைகள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். இது 2019 லோக்சபா தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அப்போது பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படவில்லை. தற்போது மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் இச்செயலியை பயன்படுத்த துவங்கி உள்ளனர். இதன் மூலம் வீல்சேர், சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் தேவைப்படும் 982 ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு 670 ஓட்டுச் சாவடிகளில் வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

முதல்வர் பிரசாரம் அமைச்சர் ஆய்வு

சாத்துார் : சாத்துாரில் மதுரை பஸ்ஸ்டாப்பில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்கிறார் . இதற்கான இடத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆய்வு செய்தார். வேட்பாளர் ரவிச்சந்திரன், தொகுதி பொறுப்பாளர் விஜய நல்லதம்பி, நகர செயலாளர் இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் பூபாலன், ஒன்றிய செயலாளர் சண்முககனி, டி.எஸ்.பி.ராமகிருஷ்ணன் உடனிருந்தனர்.

Read More