982 ஓட்டுச்சாவடிகளில் வீல்சேர், சாய்தளம்; மாற்றுத்திறனாளிகள் செயலியால் வசதி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பர்சன் வித் டிஸ்ஏபிலிட்டி’ செயலி மூலம் 982 ஓட்டுச்சாவடிகளில் வீல்சேர், சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் குறித்த தேவைகள் கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டுப்பதிவு விவரங்களை ‘பர்சன் வித் டிஸ்ஏபிலிட்டி’ எனும் செயலி மூலம் அறியலாம். இதில் புதிய வாக்காளர்களாக பதிவு, வீல்சேர் தேவை, ஓட்டுச் சாவடியில் உள்ள குறைகள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். இது 2019 லோக்சபா தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அப்போது பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படவில்லை.

தற்போது மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் இச்செயலியை பயன்படுத்த துவங்கி உள்ளனர். இதன் மூலம் வீல்சேர், சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் தேவைப்படும் 982 ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு 670 ஓட்டுச் சாவடிகளில் வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment