10 ஆண்டு கால கோர பசியில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு : முதல்வர் பழனிசாமி காட்டம்ஆபத்து

அருப்புக்கோட்டை: ”10 ஆண்டு கால கோர பசியில் தி.மு.க., உள்ளது.இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்குதான் ஆபத்து, ”என , விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரம் செய்த முதல்வர் பழனிசாமி பேசினார். திருச்சுழி மூ.மு.க., வேட்பாளர் ராஜசேகர், அருப்புக்கோட்டை அ.தி.மு.க., வேட்பாளர் வைகைச்செல்வன், விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் பாண்டுரங்கன், சிவகாசி அ.தி.மு.க.,வேட்பாளர் லட்சுமி கணேசன்,ஸ்ரீவி.,மான்ராஜ், ராஜபாளையம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சாத்துார் ரவிச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து அந்தந்த தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:ஸ்டாலின் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் அவதுாறாக பேசுகிறார். தலைவர்களை சிறுமைபடுத்தி பேசுகிறார். தி.மு.க., ஆட்சி காலத்தில் அவர் செய்த சாதனைகளை சொல்ல முடியுமா? தி.மு.க., என்றால் பொய், பொய் என்றால் தி.மு.க., கருணாநிதி, ஸ்டாலின் இப்போது உதயநிதி என வாரிசு அரசியல் நடத்துகின்றனர்.எனக்கு தொடர்ந்து பேசி தொண்டை வறண்டு விட்டது.…

Read More

வேட்பாளர்கள் இன்று

விருதுநகர்பாண்டுரங்கன் (பா.ஜ.,): சத்திரரெட்டியபட்டி, லட்சுமிநகர் பகுதிகள், பங்கேற்பு: பா.ஜ., மாநில செயலாளர் மகாலட்சுமி, நடிகை நமிதா.சீனிவாசன் (தி.மு.க.,): பாறைப்பட்டி, கிருஷ்ணாபுரம், கம்மாபட்டி, மேலகுளத்துப்பட்டி. சிவகாசி வடக்கு ஒன்றிய பகுதிகள்.தங்கராஜ் (அ.ம.மு.க.,): பாத்திமாநகர், அவ்வையார் தெரு, வீரசெல்லையாபுரம், அழகாபுரி, மீசலுார் உள்ளிட்ட பகுதிகள்.மணிமாறன் (ச.ம.க.,): என்.ஜி.ஓ.,காலனி, வடமலைக்குறிச்சி, சத்திரரெட்டியபட்டி .செல்வக்குமார் (நாம் தமிழர் கட்சி): இனாம்ரெட்டியபட்டி, பட்டம்புதுார், மருளூத்து, சூலக்கரை.குணசேகரன் (புதிய தமிழகம்): விருதுநகர் நகர்ப்பகுதிகள்.ஸ்ரீவில்லிபுத்துார்மான்ராஜ் (அ.தி.மு.க.,): வன்னியம்பட்டி சுற்று கிராமங்கள்.மாதவராவ் (காங்கிரஸ்): சுந்தரபாண்டியம், நத்தம்பட்டி சுற்று கிராமங்கள்.அபிநயா (நாம் தமிழர் கட்சி): நத்தம்பட்டி சுற்று கிராமங்கள்.சிவகாசிலட்சுமி கணேசன் (அ.தி.மு.க., ): துரைச்சாமிபுரம், கோட்டைமேடு, அம்மாபட்டி, மணியம்பட்டி, ஊராம்பட்டி, பர்மா காலனி, விளாம்பட்டி, பூலாவூரணி ஏ.துலுக்கப்பட்டி .ஜி.அசோகன் (காங்.,): முண்டகன் தெரு, பி.கே.எஸ்.தெரு, தில்லை சிதம்பரம் தெரு, ஏழுகோயில் தெரு, அனந்தப்பன் தெரு, வெள்ளஞ்சாமியார் தெரு, மணி நகர்.…

Read More

விழிப்பில்லை: கொரோனா தடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம்

ராஜபாளையம், மார்ச் 27-விருதுநகர் மாவட்டத்தில் தேர்தலால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் அலட்சியம் தொடரும் நிலையில், போதிய விழிப்புணர்வின்றி மக்களும் கூட்டமாக கூடுவதால் தொற்று வாய்ப்பு அதிகரிக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2020 மார்ச் இறுதி முதல் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொது மக்களின் உயிர்காக்க பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு ஊராட்சி அளவில் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த உடன் தளர்கவுகள் அறிவிக்கப்பட்டு சகஜ நிலை திரம்பியது.ஆனால் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொற்று எண்ணிக்கை உயர்வதுடன் தமிழகத்திலும் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டன.இதையடுத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வந்தாலும் அதிகாரிகள் அளவில் முழுமையான நடவடிக்கையின்றி அல்டசியமே தொடர்கிறது. மக்கள் பலரும் முக்கவசம்,சமூகஇடைவெளியை பின்பற்றாது உள்ளனர்.தேர்தல் காலம் என்பதால் இதன் மீது போலீஸ் முதல் அதிகாரிகள் வரை நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பொது…

Read More

தேர்தல் பயிற்சியால் அலுவலர்கள் அதிருப்தி

அருப்புக்கோட்டை: சட்ட சபை தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல் கட்ட பயிற்சி நடந்த நிலையில், நேற்று 2ம் கட்ட பயிற்சி மாவட்டம் முழுவதும் நடந்தது. தாலுகா அளவிலான அலுவலர்கள், ஆசிரியர்கள் அந்தந்த ஊர்களில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தேர்தல் தோறும் ஓட்டுப் பதிவு இயந்திரம் இயக்கும் முறை, விவி பேட் செயலாக்க பயிற்சி கையேடு வழங்கப்பட்ட நிலையில், விருதுநகர், சாத்துார் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பயிற்சியில் முறையான விளக்கம், கையேடு வழங்கப்படவில்லை.இதனால் ஆசிரியர்கள், அலுவலர்கள் அதிருப்தி அடைந்தனர். கடமைக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பயிற்சி அளிக்கப்பட்டதாக பங்கேற்றோர் புகார் கூறினர்.–

Read More

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த பங்குனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதற்காக நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறை மலையடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னர் பக்தர்களை மலையேற அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம், ஓடைகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் மலையேறினர். மாலையில் கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் பிரதோஷ வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Read More

முடங்கி கிடக்கும் கூட்டுறவு நூற்பாலை வேலையின்றி வெளியூர் செல்லும் ஸ்ரீவி.,தொழிலாளர்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் கூட்டுறவு நுாற்பாலையால் போதிய வேலைவாய்ப்பின்றி ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியூர்களில் வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். தேர்தல் தோறும் அரசியல்வாதிகள் வாக்குறுதி கொடுத்தாலும் வெற்றிக்கு பின் கண்டுகொள்வதில்லை. இதே வாக்குறுதி இந்த தேர்தலிலும் தொடரதான் செய்கிறது.ஸ்ரீவில்லிபுத்துாரில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட கூட்டுறவு நுாற்பாலை மதுரை ரோட்டில் இயங்கி வந்தது. உள்ளூரை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாக வேலை வாய்ப்பு பெற்றனர். இதனால் நகரின் கல்வி, பொருளாதாரம் உயர்ந்து காணப்பட்டது.நிர்வாக காரணங்களால் 15 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவு நுாற்பாலை மூடபட்டது. இதனால் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வேலைவாய்ப்பை இழந்து பெரும் சிரமத்தை சந்தித்தது. மூடப்பட்ட மில்லை மீண்டும் திறக்ககோரி பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இன்று வரை மில் திறக்கப்படாமல் உள்ளது. தேர்தல்களின்போது அரசியல்வாதிகள்…

Read More

தலைமைக் கழக அறிவிப்பு சட்டப்பேரவைத் தேர்தல் 2021 சாத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக எஸ்.வி சீனிவாசன் அவர்களை நியமனம் செய்த தலைமைக் கழகத்திற்கு நன்றி

தலைமைக் கழக அறிவிப்பு சட்டப்பேரவைத் தேர்தல் 2021 சாத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக எஸ்.வி சீனிவாசன் அவர்களை நியமனம் செய்த தலைமைக் கழகத்திற்கு நன்றி

Read More