தேர்தல் பயிற்சியால் அலுவலர்கள் அதிருப்தி

அருப்புக்கோட்டை: சட்ட சபை தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல் கட்ட பயிற்சி நடந்த நிலையில், நேற்று 2ம் கட்ட பயிற்சி மாவட்டம் முழுவதும் நடந்தது. தாலுகா அளவிலான அலுவலர்கள், ஆசிரியர்கள் அந்தந்த ஊர்களில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தேர்தல் தோறும் ஓட்டுப் பதிவு இயந்திரம் இயக்கும் முறை, விவி பேட் செயலாக்க பயிற்சி கையேடு வழங்கப்பட்ட நிலையில், விருதுநகர், சாத்துார் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பயிற்சியில் முறையான விளக்கம், கையேடு வழங்கப்படவில்லை.இதனால் ஆசிரியர்கள், அலுவலர்கள் அதிருப்தி அடைந்தனர். கடமைக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பயிற்சி அளிக்கப்பட்டதாக பங்கேற்றோர் புகார் கூறினர்.–

Related posts

Leave a Comment