முடங்கி கிடக்கும் கூட்டுறவு நூற்பாலை வேலையின்றி வெளியூர் செல்லும் ஸ்ரீவி.,தொழிலாளர்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் கூட்டுறவு நுாற்பாலையால் போதிய வேலைவாய்ப்பின்றி ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியூர்களில் வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.

தேர்தல் தோறும் அரசியல்வாதிகள் வாக்குறுதி கொடுத்தாலும் வெற்றிக்கு பின் கண்டுகொள்வதில்லை. இதே வாக்குறுதி இந்த தேர்தலிலும் தொடரதான் செய்கிறது.ஸ்ரீவில்லிபுத்துாரில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட கூட்டுறவு நுாற்பாலை மதுரை ரோட்டில் இயங்கி வந்தது. உள்ளூரை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாக வேலை வாய்ப்பு பெற்றனர். இதனால் நகரின் கல்வி, பொருளாதாரம் உயர்ந்து காணப்பட்டது.நிர்வாக காரணங்களால் 15 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவு நுாற்பாலை மூடபட்டது.

இதனால் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வேலைவாய்ப்பை இழந்து பெரும் சிரமத்தை சந்தித்தது. மூடப்பட்ட மில்லை மீண்டும் திறக்ககோரி பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இன்று வரை மில் திறக்கப்படாமல் உள்ளது. தேர்தல்களின்போது அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளில் இதுவே பிரதானமாக இருந்ததே தவிர இன்று வரை திறக்கப்படவில்லை.

இதனால் ஆயிரத்திற்கு மேற்பட்ட மில் தொழிலாளிகளின் குடும்பங்கள், ராஜபாளையம், சிவகாசி, திருப்பூர், கோவை என வெளியூர் சென்றுவிட்டனர். இந்ததேர்தலிலும் இதே ஆலை திறக்கப்படும் என்பது வேட்பாளர்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

Related posts

Leave a Comment