விழிப்பில்லை: கொரோனா தடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம்

ராஜபாளையம், மார்ச் 27-விருதுநகர் மாவட்டத்தில் தேர்தலால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் அலட்சியம் தொடரும் நிலையில், போதிய விழிப்புணர்வின்றி மக்களும் கூட்டமாக கூடுவதால் தொற்று வாய்ப்பு அதிகரிக்கிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2020 மார்ச் இறுதி முதல் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொது மக்களின் உயிர்காக்க பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு ஊராட்சி அளவில் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த உடன் தளர்கவுகள் அறிவிக்கப்பட்டு சகஜ நிலை திரம்பியது.ஆனால் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொற்று எண்ணிக்கை உயர்வதுடன் தமிழகத்திலும் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டன.இதையடுத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வந்தாலும் அதிகாரிகள் அளவில் முழுமையான நடவடிக்கையின்றி அல்டசியமே தொடர்கிறது.

மக்கள் பலரும் முக்கவசம்,சமூகஇடைவெளியை பின்பற்றாது உள்ளனர்.தேர்தல் காலம் என்பதால் இதன் மீது போலீஸ் முதல் அதிகாரிகள் வரை நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்புதல் போன்ற விதி மீறல்களுக்கு அதிகளவில் அரங்கேறுகின்றன. போதிய விழிப்புணர்வு இல்லாத மக்களால் நோய் பரவலுக்கு இதுவும் முக்கிய காரணியாக அமைந்து விடுகிறது .இது போன்றவற்றில் மக்களாகிய நாமும் முழு பொறுப்புடன் செயல்படுவது அவசியம்……………வேண்டும் கடுமைநகர் பகுதியை விட கிராம பகுதிகளில் விழிப்புணர்வு சற்று குறைவுதான். பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் அறிவிப்புகளாக இல்லாமல் நடைமுறையில் இதை கடுமையாக பின்பற்ற வேண்டும். தேர்தல் நேரத்தில் அதிருப்தி ஏற்படும் என்ற எண்ணத்தில் கண்டும் காணாமலும் இருந்தால் அப்பாவிகளுக்கு தொற்று பரவலுக்கு இதுவும் ஒரு காரணமாகி விடும். இதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.ராஜாராம், சமூக ஆர்வலர், ரெட்டியார்பட்டி…………………..

Related posts

Leave a Comment