10 ஆண்டு கால கோர பசியில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு : முதல்வர் பழனிசாமி காட்டம்ஆபத்து

அருப்புக்கோட்டை: ”10 ஆண்டு கால கோர பசியில் தி.மு.க., உள்ளது.இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்குதான் ஆபத்து, ”என , விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரம் செய்த முதல்வர் பழனிசாமி பேசினார்.

திருச்சுழி மூ.மு.க., வேட்பாளர் ராஜசேகர், அருப்புக்கோட்டை அ.தி.மு.க., வேட்பாளர் வைகைச்செல்வன், விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் பாண்டுரங்கன், சிவகாசி அ.தி.மு.க.,வேட்பாளர் லட்சுமி கணேசன்,ஸ்ரீவி.,மான்ராஜ், ராஜபாளையம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சாத்துார் ரவிச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து அந்தந்த தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:ஸ்டாலின் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் அவதுாறாக பேசுகிறார். தலைவர்களை சிறுமைபடுத்தி பேசுகிறார்.

தி.மு.க., ஆட்சி காலத்தில் அவர் செய்த சாதனைகளை சொல்ல முடியுமா? தி.மு.க., என்றால் பொய், பொய் என்றால் தி.மு.க., கருணாநிதி, ஸ்டாலின் இப்போது உதயநிதி என வாரிசு அரசியல் நடத்துகின்றனர்.எனக்கு தொடர்ந்து பேசி தொண்டை வறண்டு விட்டது. தொண்டை வறண்டாலும் பரவாயில்லை. தி.மு.க., வை விட மாட்டேன். டாக்டர்கள் 2 நாட்கள் ரெஸ்ட் எடுக்க கூறினார். அப்படி நான் ஓய்வு எடுத்தால் தி.மு.க.,காரன் வேற ரூட் போட்டு விடுவான். ஒரு நிமிடம் கூட ஓய்வு இல்லாமல் அ.தி.மு.க.,கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதே என் லட்சியம். தி.மு.க., ஒரு கம்பெனி. கட்சி இல்லை. கம்பெனியில் ேஷர் வாங்குவது போல் கரூரில் செந்தில் பாலாஜி, தேனியில் தங்கதமிழ்ச்செல்வன் தி.மு.க.,வில் ேஷர் வாங்கி உள்ளனர்.

Related posts

Leave a Comment