நரிக்குடி : மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் தீவிரமாக நடக்கிறது

நரிக்குடி : மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் தீவிரமாக நடக்கிறது. எனினும் தபால் ஓட்டு விண்ணப்பங்கள் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசியல் கட்சி வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் ஒன்பது நாட்களே உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர முனைப்புக்காட்டி வருகிறது. இதற்காக தினமும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.

எனினும் தபால் ஓட்டு விண்ணப்பங்களை முறையாக வழங்காமல் மந்த நிலைலேய நீடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாற்றுத்திறனாளிகள், 80 வயதைக் கடந்த முதியவர்களிடம் தபால் ஓட்டுக்களை பெற படிவம் ’12 டி’ ஐ தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரடியாக சென்று வழங்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், போலீசார்களுக்கு அந்தந்த துறை மூலம் படிவம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணி முழுமை பெறாமல் இருப்பதால் 100 சதவீத ஓட்டுப்பதிவு என்பது கேள்விக்குறியாகி வருகிறது……

இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு

தபால் ஓட்டு செலுத்தும் பணி நாளை (டிச.,30) நிறைவு பெறுகிறது. இதில் விடுபட்டவர்களை கணக்கில் எடுத்து கொண்டு மீண்டும் இரண்டாம் கட்டமாக ஓட்டுப்பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்ய இயலும்.தமீம் அன்சாரி, சமூக ஆர்வலர், வீர சோழன்.

Related posts

Leave a Comment