பிரசாரத்தில் கையசைத்து சென்ற விஜயகாந்த்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் பிரசாரம் செய்ய வந்த தே.முதி.க., தலைவர் விஜயகாந்த் எதுவும் பேசாது கையசைத்தபடி ஓட்டு சேகரித்தார்.

அருப்புக்கோட்டை தொகுதியில் அ.ம.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளராக போட்டியிடுபவர் ரமேஷ். இவரை ஆதரித்து மரக்கடை பஸ் ஸ்டாப்பில் விஜயகாந்த் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 7:00 மணிக்கு வந்த விஜயகாந்த் வேனில் நின்றப்படி கையை மட்டும் அசைத்து விட்டு ஒன்றும் பேசாமல் சென்றார். அங்கிருந்த வேட்பாளர், கூட்டணி கட்சியினர் ஏமாற்றம் அடைந்தாலும் அவரது உடல் நலன்கருதி பேசாததை புரிந்து கொண்டு, அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment