தடுக்கலாமே! தலைவர்கள் பிரசாரம்போது நெரிசல்…

சிவகாசி: மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் வருகையின் போது போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களை கட்டி வருகிறது. வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வதற்காக தலைவர்கள் வருகையில் குறிப்பிட்ட இடத்தில் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி அளிப்பர். அந்த இடத்தில் தலைவர்கள், பேச்சாளர்கள் வருவதற்கு 2 மணி நேரத்திற்கும் முன்பாகவே கட்சியினர் திரண்டிருப்பர். அந்த நேரத்தில் ரோடு மறைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலம் பாதிக்கிறது. அவசரத்திற்கு டூ வீலர், கார்களில் செல்கிறவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படுகிறது. மேலும் அதிக வாகனங்களில் கட்சியினர் வருவர் . இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கிறது. அந்த நேரத்தில் போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுத்தி வாகனங்களை வேறு வழியில் செல்ல நடவடிக்கை எடுப்பர். பஸ்களை வேறு வழியில் செல்ல வைப்பதால் வழக்கமான பஸ் ஸ்டாப்களில் காத்திருக்கம் பயணிகள் பஸ் வராமல் தவிக்கின்றனர். இதை முறையாக கையாண்டு பொதுமக்கள் பாதிப்படையாமல் செய்ய வேண்டும். கூட்டங்களை முடிந்த வரை போக்குவரத்து இல்லாத இடங்களில் நடத்த அனுமதி கொடுக்க வேண்டும்.

பெரும் சிரமமே

தேர்தல் காலங்களில் தலைவர்கள், வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய பொதுமக்களுக்கு சிரமம் இல்லாதா இடத்தினை ஒதுக்க வேண்டும். போக்குவரத்து பாதிப்பால் பெரிதும் அவதிப்படுவதால் பொதுமக்கள் வெறுப்பிற்கு ஆளாவார்கள். தலைவர்கள் வருகையின் போது குறைந்தது 3 மணி நேரம் அந்த இடம் முடக்கப்படுவதால் அவசரத்திற்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.

-லெவின்ராம், தனியார் ஊழியர், சிவகாசி..

Related posts

Leave a Comment