விருதுநகரில் பா.ஜ.,க்கு சாதகம்; தேர்தல் பணி கூட்டத்தில் அமைச்சர் பேச்சு

விருதுநகர்: ”உளவுத்துறை அறிக்கையில் விருதுநகர் தொகுதி பா.ஜ.,வுக்கு சாதகமாக இருப்பதாக,” தேர்தல் பணி கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.

விருதுநகரில் நடந்த பா.ஜ., நிர்வாகிகளுடனான தேர்தல் பணி ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க., பா.ஜ., நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பா.ஜ., நிர்வாகிகள், அ.தி.மு.க., நிர்வாகிகளை முன்னே வைத்தே பிரசாரங்களுக்கு செல்லுங்கள். தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவாசன் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாலும், உளவுத்துறை அறிக்கை பா.ஜ.,வுக்கு சாதகமாக இருப்பதாலும் நமக்கே வெற்றி உறுதி.

325 ஓட்டுச்சாவடிகளிலும் பூத் முகவர்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், என்றார். பா.ஜ., வேட்பாளர் பாண்டுரங்கன், மாவட்ட தலைவர் கஜேந்திரன்,பென்டகன் உரிமையாளர் ஜவஹர், பொறுப்பாளர் பொன்ராஜன் , அ.தி.மு.க., அவைத்தலைவர் விஜயகுமரன், மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா, ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், ராஜசேகர், இளைஞரணி செயலாளர் மாரிக்கனி பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment