விவசாயிகளுக்கு துரோகம்: காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் பிரசாரம்

விருதுநகர் : விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் பிரதமர் மோடியுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.,வை புறந்தள்ள வேண்டும்,” என, காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் பிரசாரம் செய்தார்.

விருதுநகர் தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவாசனுக்கு மதுரை, ரோடு, பஜார் வீதிகளில் நடந்து சென்று ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது: வேளாண்மையை குழி தோண்டி புதைக்கும் மத்திய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டில்லியில் 120 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பிரச்னையை தீர்க்க பிரதமர் மோடி முயற்சி எடுக்கவில்லை.விலை வாசி உயர்வு அதிகரித்துள்ளது. நிறைவேறாத வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றும் முயற்சியில் அ.தி.மு.க., உள்ளது, என்றார்.

Related posts

Leave a Comment