ஸ்ரீவி.,யில் தினேஷ்குண்டுராவ்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் காங்., வேட்பாளர் மாதவராவை ஆதரித்து அக்கட்சி தமிழக பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் பிரசாரம் செய்தார்.

காங்.,வேட்பாளர் மாதவராவ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ,அவருக்காக அவரது மகள் திவ்யாராவ், கூட்டணி கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து காங்., தேசிய செயலர் தினேஷ்குண்டுராவ் பிரசாரம் செய்தார்.

அவர் பேசியதாவது: மாதவராவ் சிகிச்சையிலிருந்தாலும் கூட்டணி கட்சியினர் உற்சாகத்துடன் பணியாற்றுவது வெற்றியை உறுதி செய்துள்ளதை பார்க்கமுடிகிறது ,என்றார்.இந்திய கம்யூ., முன்னாள் எம்.பி.,அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,ராமசாமி, மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் செல்வமணி, ஒன்றிய தலைவர் மல்லிஆறுமுகம், காங்., மாவட்ட தலைவர் ரெங்கசாமி பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment