உயிரினங்களை வாட்டும் கோடை வெயில்

விருதுநகர் : விருதுநகரில் வாட்டும் கோடையால் குரங்கு போன்ற உயிரினங்களை தண்ணீர் தேடி நகருக்குள் வந்து செல்கின்றன.

மனித வளர்ச்சியின் அபாரத்தால் காடுகளை யொட்டி வீடுகள் கட்டப்பட்டதால் குடியிருப்புகளுக்குள் யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் புகுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த வரையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஒரு முறை சிறுத்தை வந்து சென்றது. காரியாபட்டி மாந்தோப்பு பகுதியில் குரங்குகள் வந்து செல்லும். தற்போது வாட்டி வரும் கோடை வெயில் மனிதர்களை மட்டுமல்லாது பிற உயிரினங்களையும் கிறுகிறுங்க செய்துள்ளது.

இந்நிலையில் விருதுநகரில் ஆங்காங்கே குரங்குகள் தண்ணீர் தேடி நகருக்குள் சுற்றி திரிந்தன. குரங்கு என்பதால் மக்கள் பெரிய அளவில் அச்சுறுத்தல் அடையவில்லை. இந்நிலையில் அவற்றின் தேவை அறிந்த மனிதநேயமிக்க சிலர் குரங்குகளுக்கு உணவளித்து குடிநீர் வைத்தனர். சில குரங்குகள் வீடுகளில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரை எடுத்து குடித்தன. இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கோடையில் உயிரினங்களும் மிகுந்த சோர்வையும், வறட்சியான சூழலையும் தாண்ட வேண்டியுள்ளது.பறவைகளுக்கு மாடியில் தண்ணீர் வைப்பது போல் வீட்டின் பகுதிகளிலும் ஆங்காங்கே தண்ணீரை தேக்கி வைப்பது குரங்கு போன்ற உயிரினங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்கின்றனர் வன ஆர்வலர்கள்.

Related posts

Leave a Comment