விழாக்கள் தடையால் நாட்டுப்புற கலைஞர்கள் பரிதவிப்பு!

சாத்துார், ஏப். 20 -கொரோனா பரவல் தடுக்கும் விதமாக கோயில் திருவிழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், நாடக, நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கும் வழி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள கோயில் திருவிழாக்களில் கரகம் ஒயிலாட்டம், தெம்மாங்கு , சரித்திரநாடகங்கள் நடத்தப்படும். இதன் மூலம் நாடகநடிகர்கள், நாட்டு புறகலைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். இதோடு நாதஸ்வரகலைஞர்கள், தாரை தப்பட்டை வாத்தியக் குழுவினரும் பிழைப்பு நடத்தி வந்தனர். தற்போது கொரோனா பரவலால் விழாக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளதால், இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. மாற்று தொழில் தெரியாத இவர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். நுாறு சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி கரகம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இதேபோன்று இவர்களை கொண்டு மாவட்டம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு…

Read More

5 ஏக்கரில் அரசு பல் மருத்துவ கல்லூரி; நிலம் ஆர்ஜிதம் செய்து அறிவிப்பு பலகை வைப்பு

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே அமைய உள்ள அரசு பல் மருத்துவ கல்லுாரி கட்டுமானத்துக்காக, 5 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு நில ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே இப்பகுதியில் ரூ.185 கோடி மதிப்பீட்டில் மருத்துவகல்லுாரி கட்டுமான பணிகள் நடந்து வருகிது.இதன் பணிகளை ஜூலைக்குள் முடிக்கவும் பொதுப்பணித்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. 2021- – 22 ம் கல்வியாண்டிற்கான 150 எம்.பி.பி.எஸ்., சீட்டிற்கான முதலாம் ஆண்டு அட்மிஷன் ஆகஸ்டில் துவங்க உள்ளது.இந்நிலையில் இங்கு தமிழகத்தின் இரண்டாவது அரசு பல் மருத்துவ கல்லுாரி அமைக்கப்படும் என 2015ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார். இதற்கான கட்டுமான பணிக்காக முதற்கட்டமாக ரூ.50 கோடியை முதல்வர் பழனிசாமி ஒதுக்கினார்.எனினும் நில ஆர்ஜிதம் செய்வதில் சிக்கல் நீடித்தது. தற்போது இப்பணியும் முடிக்கப்பட்டு, நில ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு பலகையும்…

Read More