விழாக்கள் தடையால் நாட்டுப்புற கலைஞர்கள் பரிதவிப்பு!

சாத்துார், ஏப். 20 -கொரோனா பரவல் தடுக்கும் விதமாக கோயில் திருவிழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், நாடக, நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கும் வழி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மாவட்டத்தில் உள்ள கோயில் திருவிழாக்களில் கரகம் ஒயிலாட்டம், தெம்மாங்கு , சரித்திரநாடகங்கள் நடத்தப்படும். இதன் மூலம் நாடகநடிகர்கள், நாட்டு புறகலைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். இதோடு நாதஸ்வரகலைஞர்கள், தாரை தப்பட்டை வாத்தியக் குழுவினரும் பிழைப்பு நடத்தி வந்தனர். தற்போது கொரோனா பரவலால் விழாக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளதால், இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது.

மாற்று தொழில் தெரியாத இவர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். நுாறு சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி கரகம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இதேபோன்று இவர்களை கொண்டு மாவட்டம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு நாடகங்கள் ,கலை நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட நிர்வாகம் வழி செய்யலாம். இதன் மூலம் இவர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஓர் வழி கிடைக்கும்……….

நேரத்தை அதிகரித்து அனுமதி:

கோயில் விழாபோது கிடைக்கும் வருமானத்தை கொண்டு கலை , குடும்பத்தை கட்டி காத்து வருகின்றனர் நாடக கலைஞர்கள். தற்போது கொரோனா காரணமாக விழாக்களை 2 மணி நேரத்திற்குள் நடத்தி கொள்ள அனுமதிப்பதன் மூலம், இவர்களும் வருமானத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர். இவர்கள் நலன் கருதி விழாக்கள் நேரத்தை அதிகரித்து நாடக கலைகளை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.உதயகுமார், தனியார் ஊழியர், சாத்துார்.

Related posts

Leave a Comment