5 ஏக்கரில் அரசு பல் மருத்துவ கல்லூரி; நிலம் ஆர்ஜிதம் செய்து அறிவிப்பு பலகை வைப்பு

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே அமைய உள்ள அரசு பல் மருத்துவ கல்லுாரி கட்டுமானத்துக்காக, 5 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு நில ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே இப்பகுதியில் ரூ.185 கோடி மதிப்பீட்டில் மருத்துவகல்லுாரி கட்டுமான பணிகள் நடந்து வருகிது.இதன் பணிகளை ஜூலைக்குள் முடிக்கவும் பொதுப்பணித்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. 2021- – 22 ம் கல்வியாண்டிற்கான 150 எம்.பி.பி.எஸ்., சீட்டிற்கான முதலாம் ஆண்டு அட்மிஷன் ஆகஸ்டில் துவங்க உள்ளது.இந்நிலையில் இங்கு தமிழகத்தின் இரண்டாவது அரசு பல் மருத்துவ கல்லுாரி அமைக்கப்படும் என 2015ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார். இதற்கான கட்டுமான பணிக்காக முதற்கட்டமாக ரூ.50 கோடியை முதல்வர் பழனிசாமி ஒதுக்கினார்.எனினும் நில ஆர்ஜிதம் செய்வதில் சிக்கல் நீடித்தது. தற்போது இப்பணியும் முடிக்கப்பட்டு, நில ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment