சதுரகிரியில்3 நாள் அனுமதி

ஸ்ரீவில்லிபுத்துார்:’சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம், பவுர் ணமியை முன்னிட்டு 3 நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.ஏப்.24ல் பிரதோஷத்தை முன்னிட்டு காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.ஏப்.25 அன்று ஊரடங்கால் அனுமதியில்லை. ஏப்.26ல் பவுர்ணமியை முன்னிட்டு காலை 7:00 மணி முதல் 12:00, ஏப்.27ல் காலை 10:00மணி வரை மட்டுமே அனுமதி. இரவு தங்க அனுமதி கிடையாது, என கோயில் செயல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

Read More

விருதுநகர் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள்; கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம்

விருதுநகர் : விருதுநகர் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள் ஓட்டும் எண்ணும் பணிக்கு போடவுள்ளதாகவும், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம் எனவும் கலெக்டர் கண்ணன் கூறியுள்ளார். அவரது செய்திக்குறிப்பு:விருதுநகர் மாவட்ட ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கையின்போது முகவர்கள் பென்சில், பேனா, காகிதம், 17 சி படிவம், ரப்பர் ஆகியவை மட்டும் எடுத்து செல்ல வேண்டும். கொரோனா பாதிப்பு இல்லை எனும் சான்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும். கொரோனா உறுதியானால் 24 மணி நேரத்திற்கு முன்பே மாற்று முகவர்களை தேர்வு செய்து தேர்தல் அலுவலரிடம் அடையாள அட்டை பெற வேண்டும். இதற்கு தயாராக ஒவ்வொரு தொகுதியிலும் அனுமதிக்கப்பட்ட முகவர்களுடன் கூடுதலாக 25 சதவீதம் முகவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Read More

பூமித்தாயின் மூச்சை அடைக்கும் பாலிதீன்! இன்று உலக பூமி தினம்

விருதுநகர் : பூமியானது மனிதர்கள் உட்பட பல கோடி உயிரினங்களின் உணவு, உறைவிடத்தை உறுதி செய்யும் பெரும் இயற்கை. மனிதன் பல தீமை செய்தும் அதை பொறுத்து மீண்டும் மீளும் வகையில் தான் பூமியும் கடவுளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பூமியை காக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப். 22ல் உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. ‘நம் பூமியை மீட்டெடுப்போம்’ என்பதே இந்தாண்டின் கருபொருள். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் மாசுபாடு, மழையின்மை, பூமி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது. இது மனித வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. விவசாயம், கால்நடை வளர்ப்பு பாதிக்கும் அபாயம் உள்ளது. இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட மனிதனால் வாழ முடியாது. இதை இன்றைய குழந்தைகளிடம் எடுத்து செல்ல வேண்டும். அவர்கள் பூமியின் எதிர்காலத்தை…

Read More