விருதுநகர் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள்; கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம்

விருதுநகர் : விருதுநகர் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள் ஓட்டும் எண்ணும் பணிக்கு போடவுள்ளதாகவும், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம் எனவும் கலெக்டர் கண்ணன் கூறியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:விருதுநகர் மாவட்ட ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கையின்போது முகவர்கள் பென்சில், பேனா, காகிதம், 17 சி படிவம், ரப்பர் ஆகியவை மட்டும் எடுத்து செல்ல வேண்டும். கொரோனா பாதிப்பு இல்லை எனும் சான்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும். கொரோனா உறுதியானால் 24 மணி நேரத்திற்கு முன்பே மாற்று முகவர்களை தேர்வு செய்து தேர்தல் அலுவலரிடம் அடையாள அட்டை பெற வேண்டும். இதற்கு தயாராக ஒவ்வொரு தொகுதியிலும் அனுமதிக்கப்பட்ட முகவர்களுடன் கூடுதலாக 25 சதவீதம் முகவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment