சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜைகள்

விருதுநகர் : விருதுநகர் அருகே எரிச்சநத்தத்தில் ஆதிசக்தி அன்னை ஸ்ரீமாசாணி அம்மன்தியான பீடம் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனுக்கு 16 அபிேஷகம் செய்து நோய் நொடியிலிருந்து மக்களை காப்பாற்ற அம்மனிடம் வேண்டி வழிபாடு நடத்தப்பட்டது. பூஜைகளை பூஜாரிகள் நடத்தினர்.சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் ரோடு இந்திரா நகர் ஜடா முனீஸ்வரர் கோயிலில் சித்ரா பவுர்ணமி பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.சிவகாசி சாட்சியாபுரம் தொழிற்பேட்டை முத்துமாரியம்மன் கோயில், ஆட்டோ ஸ்டாண்டு துர்கை பரமேஸ்வரி, பேச்சியம்மன், சிவன் கோயில், மாரியம்மன், பத்ரகாளியம்மன், திருத்தங்கல் சக்தி மாரியம்மன், கருநெல்லிநாதர் உள்ளிட்ட கோயில்களில் பவுர்ணமி பூஜை நடந்தது.

Read More

கோயில் அருகே டாஸ்மாக்; ஆக்கிரமிப்பு; சிரமத்தில் சிவன் கோயில் மாட வீதி மக்கள்

சிவகாசி : ஆக்கிரமிப்பால் அல்லல்படும் பக்தர்கள், கோயில் அருகே டாஸ்மாக்,வணிக வளாகத்தில் செயல்படாத சுகாதார வளாகம் என சிவகாசி சிவன் கோயில் மாட வீதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர். சிவன் கோயிலை சுற்றிலும் கடைகள், குடியிருப்புகள் உள்ளன. இங்கு கோயில் மாட வீதி, குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை துார்வாரவில்லை. குப்பையால் சாக்கடை நீர் தேங்கி சுகாதார கேட்டினை ஏற்படுத்துகிறது.சில இடங்களில் சாக்கடை துார்வாரப்பட்டும் கழிவுகள் அங்கேயே போடப்படுவதால் மீண்டும் சாக்கடையிலே குப்பை விழுகிறது. கோயில் முன்புறம் கடைகள், டூவீலர்களின் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

Read More

கபசுர குடிநீர் பந்தல் திறப்பு

சாத்துார் : முக்குராந்தலில் கபசுர குடிநீர் பந்தலை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மக்களுக்கு தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், கபசுர குடிநீர், வாட்டர் பாட்டில் வழங்கினார். மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முககனி, நகர செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டனர்.

Read More

சரிசெய்யுங்க! டவர் இருந்தும் கிடைக்காத அலைபேசி சிக்னல்

சாத்துார் : -விருதுநகர் மாவட்டத்தில் போதிய நவர் இருந்தும் அலைபேசி சிக்னல் கிடைக்காத வாடிக்கையாளர்கள், கிடைக்கும் பகதிகளை நோக்கி செல்லும் அவலம் இன்றும் தொடர்கிறது. மாவட்டத்தில் கிராமங்கள் அதிகம் . இங்குதான் பெருமபாலான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இங்கு பணிபுரிபவர்கள் பலரும் நகர் பகுதியில் இருந்தே வேலைக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தங்கள் தேவைக்கு தனியார், பி.எஸ்.என்.எல்., அலைபேசி சிம்களை பயன்படுத்துகின்றனர். நகர் பகுதிகளில் மட்டுமே அலைபேசி சிக்னல் கிடைக்கின்ற நிலையில் கிராமப்பகுதிகளுக்கு சென்று விட்டாள் சிக்னல் கிடைக்காமல் பலரும் அவதிக்கு உள்ளாகின்றனர் . தொடர்பு கொண்டால் சுவிட்ச்ஆப் இல்லையேல் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் என்ற பதிலையே கேட்கமுடிகிறது. பல கிராமங்களில் வீட்டைவிட்டு வெளியே வந்து பேசும் நிலை இன்றைக்கும் தொடர்கிறது. அவசர தேவைக்கு சிக்னலை தேடி அலையும் நிலையும் உள்ளது. வத்திராயிருப்பு , முதலிப்பட்டி இருக்கன்குடி,…

Read More