கோயில் அருகே டாஸ்மாக்; ஆக்கிரமிப்பு; சிரமத்தில் சிவன் கோயில் மாட வீதி மக்கள்

சிவகாசி : ஆக்கிரமிப்பால் அல்லல்படும் பக்தர்கள், கோயில் அருகே டாஸ்மாக்,வணிக வளாகத்தில் செயல்படாத சுகாதார வளாகம் என சிவகாசி சிவன் கோயில் மாட வீதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.

சிவன் கோயிலை சுற்றிலும் கடைகள், குடியிருப்புகள் உள்ளன. இங்கு கோயில் மாட வீதி, குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை துார்வாரவில்லை. குப்பையால் சாக்கடை நீர் தேங்கி சுகாதார கேட்டினை ஏற்படுத்துகிறது.சில இடங்களில் சாக்கடை துார்வாரப்பட்டும் கழிவுகள் அங்கேயே போடப்படுவதால் மீண்டும் சாக்கடையிலே குப்பை விழுகிறது. கோயில் முன்புறம் கடைகள், டூவீலர்களின் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

Related posts

Leave a Comment