சரிசெய்யுங்க! டவர் இருந்தும் கிடைக்காத அலைபேசி சிக்னல்

சாத்துார் : -விருதுநகர் மாவட்டத்தில் போதிய நவர் இருந்தும் அலைபேசி சிக்னல் கிடைக்காத வாடிக்கையாளர்கள், கிடைக்கும் பகதிகளை நோக்கி செல்லும் அவலம் இன்றும் தொடர்கிறது.

மாவட்டத்தில் கிராமங்கள் அதிகம் . இங்குதான் பெருமபாலான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இங்கு பணிபுரிபவர்கள் பலரும் நகர் பகுதியில் இருந்தே வேலைக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தங்கள் தேவைக்கு தனியார், பி.எஸ்.என்.எல்., அலைபேசி சிம்களை பயன்படுத்துகின்றனர். நகர் பகுதிகளில் மட்டுமே அலைபேசி சிக்னல் கிடைக்கின்ற நிலையில் கிராமப்பகுதிகளுக்கு சென்று விட்டாள் சிக்னல் கிடைக்காமல் பலரும் அவதிக்கு உள்ளாகின்றனர் .

தொடர்பு கொண்டால் சுவிட்ச்ஆப் இல்லையேல் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் என்ற பதிலையே கேட்கமுடிகிறது. பல கிராமங்களில் வீட்டைவிட்டு வெளியே வந்து பேசும் நிலை இன்றைக்கும் தொடர்கிறது. அவசர தேவைக்கு சிக்னலை தேடி அலையும் நிலையும் உள்ளது. வத்திராயிருப்பு , முதலிப்பட்டி இருக்கன்குடி, நீராவி பட்டி, வன்னிமடை, சின்னகொல்லப்பட்டி செவல்பட்டி, அப்பைய நாயக்கன்பட்டி என நுாற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் இந்நிலை நீடிக்கிறது………..

இருக்கு ஆனா இல்லை

பல அலைபேசி டவர்கள் இருந்தும் எந்த சிம் கார்டுக்கும் சிக்னல் சரிவர கிடைப்பதில்லை. டவர்களில் மின்சாரம் தடைபட்டால் தானாக இயங்க பேட்டரிகள் பொருத்தப்பட்டன. ஆனால் இந்த பேட்டரிகளை முறையாக பராமரிக்காமல் போனதால் பல டவர்களில் பேட்டரிகள் செயல் இழந்துவிட்டன. இதனால் டவர்கள் எல்லாம் காட்சி பொருளாக உள்ளது. சிக்னல் கிடைக்காது வாடிக்கையாளர்கள் அடிக்கடி கம்பெனிகளை மாற்றி வருகின்றனர்.மகாலிங்கம், வியாபாரி, சாத்துார்.

Related posts

Leave a Comment