சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜைகள்

விருதுநகர் : விருதுநகர் அருகே எரிச்சநத்தத்தில் ஆதிசக்தி அன்னை ஸ்ரீமாசாணி அம்மன்தியான பீடம் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

அம்மனுக்கு 16 அபிேஷகம் செய்து நோய் நொடியிலிருந்து மக்களை காப்பாற்ற அம்மனிடம் வேண்டி வழிபாடு நடத்தப்பட்டது. பூஜைகளை பூஜாரிகள் நடத்தினர்.சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் ரோடு இந்திரா நகர் ஜடா முனீஸ்வரர் கோயிலில் சித்ரா பவுர்ணமி பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.சிவகாசி சாட்சியாபுரம் தொழிற்பேட்டை முத்துமாரியம்மன் கோயில், ஆட்டோ ஸ்டாண்டு துர்கை பரமேஸ்வரி, பேச்சியம்மன், சிவன் கோயில், மாரியம்மன், பத்ரகாளியம்மன், திருத்தங்கல் சக்தி மாரியம்மன், கருநெல்லிநாதர் உள்ளிட்ட கோயில்களில் பவுர்ணமி பூஜை நடந்தது.

Related posts

Leave a Comment