570 பேருக்கு கொரோனா

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 570 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 402 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மூவர் பலியாகி உள்ளனர். 3999 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நடைமுறைகளும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. 2020ல் காய்கறிகள், மளிகை டோர் டெலிவரி, வீடு வீடாக கபசுர குடிநீர் விநியோகம், கிரிமிநாசினி தெளிப்பு போன்ற நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும்.

Read More

அய்யோ.. என்ன கொடுமை.. இயக்குநர் அருண்ராஜா காமராஜின் இளம் மனைவி கொரோனாவுக்கு பலி!

சென்னை: நடிகரும் இயக்குநருமான அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து மான் கராத்தே, ரெமோ, பென்சில், மரகத நாணயம், நட்புன்னா என்னன்னு தெரியுமா, கபெ ரணசிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மனைவி மரணம் இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிந்துஜா. இந்நிலையில் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி சிந்துஜா உயிரிழந்தார். அவருக்கு வயது 38. அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More

முதல்வரிடம் ரூ.50 லட்சம் கொரோனா நிவாரண நிதி அளித்த ரஜினி

சென்னை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகரித்து, நாளுக்கு நாள் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறது. பலர் மருத்துவ வசதிகள் இன்று அவதிப்படுகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி கொள்ள அனைவரும் தாராள நிதி அளிக்கும் படி கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து கோலிவுட் பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர். ஏற்கனவே நடிகர் சிவக்குமார், டைரக்டர் வெற்றிமாறன், ரஜினியின்மகள் சவுந்தர்யா ஆகியோர் நிதி அளித்துள்ளனர். நடிகர் அஜித் ரூ.25 லட்சம் அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை, ரஜினி இன்று நேரில் சந்தித்தார். அப்போது ரூ.50 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரஜினி…

Read More

தமிழகத்தில் ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்… தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மதுரை, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்தது முதலே பல்வேறு முக்கிய பதவிகளுக்கும் புதிய நபர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ அரசின் புதிய தலைமை செயலராக வெ இறையன்பு நியமிக்கப்பட்டார். அதேபோல சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநராக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக ககன்தீப் சிங் பேடி சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார், இந்நிலையில், மதுரை, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த திவ்யதர்ஷினி தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் ஆணையராக இருந்த சிவராசு திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சிப்காட் நிர்வாக இயக்குநராக இருந்த அனீஷ் சேகர் மதுரை…

Read More