ஊரடங்கில் ‘சும்மா’ சுற்றியவர்கள்; ஆம்புலன்சில் ஊரை சுற்றி காட்டிய தாசில்தார்

அருப்புக்கோட்டை : கொரேனா தொற்றால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ‘சும்மா ‘சுற்றி திரிந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி ஊரை சுற்றி காட்டி நுாதன தண்டனை வழங்கிய அருப்புக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன் மக்களிடையே சபாஷ் பெற்றுள்ளார்.

தொற்று நேரத்தில் மக்கள் தேவை இல்லாமல் வெளியில் வரக் கூடாது என அறிவுறுத்தபட்டுள்ளது. வீடு தேடி காய்கறி,பழங்கள் வண்டிகள் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தேவையில்லாமல் ஊர் சுற்ற பலரும் வெளியில் கிளம்பி வந்து விடுகின்றனர்.

அதன்படி அருப்புக்கோட்டையில் ‘சும்மா ‘ சுற்றியவர்களை தாசில்தார் ரவிச்சந்திரன் பிடித்து ஆம்புலன்சில் ஏற்றினார். நகரில் ஒரு ரவுண்ட் வந்து அவர்களுக்கு கொரோனா தொற்றின் தாக்கம், முகக் கவசம், ஊரடங்கு அவசியம் பற்றி விளக்கி, தேவையில்லாமல் வெளியில் சுற்ற கூடாது என அறிவுறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

Related posts

Leave a Comment