கண்துடைப்பால் கலக்கம்! 2020 போல் இல்லை கொரோனா தடுப்பு பணி

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு புணிகள் 2020 போல் இல்லாமல் கண்துடைப்பாக நடைபெறும் நிலையில், நிதியின்றி திணறும் ஊராட்சிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கி இதன் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .

கொரோனா 2 வது அலை மாவட்டத்தில் தீவிரமாக பரவி வருகிறது. இரு வாரங்களுக்கு முன்பு தினமும் 100 ல் இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது 1000 ஐ தாண்டி விட்டது. உள்ளாட்சி நிர்வாகங்கள் கொரோனா தடுப்பு பணிகளாக கிருமி நாசினி தெளிப்பு, பிளீச்சிங் பவுடர் , துாய்மை பணிகளை மேற்கொள்தல் என பணிகளை மேற்கொண்டாலும் இவை அனைத்துமே கண்துடைப்பாகவே நடக்கிறது.

2020 கொரோனா போது உள்ளாட்சிகளில் இருந்த ஆர்வம், நடவடிக்கை என்பது தற்போது சுத்தமாக இல்லை. கிரிமிநாசினி வாகனங்களை எங்கும் காண முடியவில்லை. ஊரடங்கு போது மக்கள் நடமாட்டம் குறைக்க உள்ளாட்சிகள்,தோட்டக்கலை துறை மூலம் காய்கறிகள், பழங்கள்,மளிகை என அத்தியாவசிய பொருட்கள் வீடுதேடி வந்தது. ஆனால் இதன் நடைமுறையும் கடமைக்காகவே நடக்கிறது.

மாவட்டத்தில் முதல் நிலை ஊராட்சிகளில் வரி வசூல் மூலமாக கிடைக்கும் பணத்தை கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டாலும் சிறிய ஊராட்சிகளுக்கு எந்த நிதியும் இல்லாததால் ஒன்றிய நிர்வாகத்தை நாடிய இருக்கும் நிலை தான் உள்ளது .ஒன்றிய நிர்வாகமும் எதையும் கண்டுக்காதததால் கொரோனா தடுப்புபணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை வேண்டும்

2020 ல் உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரமாக களப் பணி மேற்கொண்டன . ஆனால் தற்போது கொரோனா உச்சமடைந்தும் தடுப்பு பணிகளில் தீவிரம் இல்லை. பொதுமக்களும் தீவிரத்தை உணர்ந்து கொள்ளாமல் உள்ளனர். அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப் படுத்த அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரவிச்சந்திரன், டிரைவர், சிவகாசி………………..

Related posts

Leave a Comment