திருத்தங்கல் தடுப்பூசி முகாம்

திருத்தங்கல், SRN அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சென்ற வாரம் நடத்த ஏற்பாடு செய்திருந்த தடுப்பூசி முகாம் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று நடை பெற்றது. இதில் 150 பேர் பங்கேற்று பயன் அடைந்தனர்.

Read More

இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான கிரிக்கெட் வீரர்கள் நேற்று நள்ளிரவு மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்றனர்.

இந்திய கிரிக்கெட்‌ அணி இங்கிலாந்துக்கு சென்றதும்,தனிமைப்படுத்தபட்ட பிறகு இந்திய வீரர்கள்‌ பயிற்சியை மேற்கொள்வார்கள்‌.மேலும்‌, 2-வது கொரோனா தடுப்பூசியை வீரர்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Read More

Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் 03.06.2021* கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் *சிவகாசி கிழக்கு காவல் காவல் நிலையம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள்* இணைந்து 100 பேருக்கு காய்கறிகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்,மேலும் *திருத்தங்கல் போக்குவரத்து காவல்துறையினர்* சார்பில் ஆதரவற்ற விதவைகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் முககவசம் வழங்கியும் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்,

Read More

Save Shakti Foundation

Save Shakti Foundation நிறுவனர் வரலக்‌ஷ்மி சரத்குமார் அவர்களும் இணை நிறுவனர் சாயா தேவி அவர்களும் திருவல்லிகேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவு வழங்கப்பட்டு வருவதன் விவரங்களை அளித்தனர்.

Read More

ராஜபாளையம் அருகே நெல் கொள்முதல் நிலையம், எம்எல்ஏ தங்கப்பாண்டியன் துவக்கி வைத்தார்

நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்ற, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ தங்கப்பாண்டியன் புதிய நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர், தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. பெரும்பாலும் நெல் விவசாயம் இந்தப்பகுதியில் அதிகமாக நடந்து வருகிறது. ஆனால் இந்தப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாமல் விவசாயிகள், விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்கு கடுமையாக சிரமப்பட்டு வந்தனர். நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று, விவசாயிகள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் முயற்சியால் சேத்தூர், தேவதானம் பகுதியில் புதியதாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பேசும்போது, கொரோனா பெருந்தொற்று காலத்திலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக தமிழக…

Read More

சிவகாசி அரசு மருத்துவமனைக்கு இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சமூக ஆர்வலர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அரசுடன் இணைந்து தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். ஆதரவற்றவர்கள், முதியவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு உணவுகள், குடிநீர் பாட்டில்கள் வழங்குவது, அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது, தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது, இலவச ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இன்று சமூக ஆர்வலர் டேனியல், 2 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமாரிடம் வழங்கினார். இந்த 2 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், சார் ஆட்சியர் தினேஷ்குமார் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அய்யனாரிடம் வழங்கினார். ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய சமூக ஆர்வலருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

Read More

விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்க்கை

விருதுநகர்:விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரியில் ஆகஸ்டில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான சேர்க்கை நடக்கிறது.விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 22 ஏக்கரில் ரூ.380 கோடியில் அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமானப்பணி முடியும் தருவாயில் உள்ளது. ”ஆகஸ்டில் 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான சேர்க்கை நடக்க உள்ளது,” என டீன் சங்குமணி தெரிவித்தார்.

Read More