ஸ்ரீவி.,யில் தினேஷ்குண்டுராவ்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் காங்., வேட்பாளர் மாதவராவை ஆதரித்து அக்கட்சி தமிழக பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் பிரசாரம் செய்தார். காங்.,வேட்பாளர் மாதவராவ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ,அவருக்காக அவரது மகள் திவ்யாராவ், கூட்டணி கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து காங்., தேசிய செயலர் தினேஷ்குண்டுராவ் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: மாதவராவ் சிகிச்சையிலிருந்தாலும் கூட்டணி கட்சியினர் உற்சாகத்துடன் பணியாற்றுவது வெற்றியை உறுதி செய்துள்ளதை பார்க்கமுடிகிறது ,என்றார்.இந்திய கம்யூ., முன்னாள் எம்.பி.,அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,ராமசாமி, மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் செல்வமணி, ஒன்றிய தலைவர் மல்லிஆறுமுகம், காங்., மாவட்ட தலைவர் ரெங்கசாமி பங்கேற்றனர்.

Read More

வேட்பாளர்கள் இன்று

விருதுநகர் பாண்டுரங்கன் (அ.தி.மு.க., கூட்டணி): விருதுநகர் நகர் பகுதிகள்.சீனிவாசன் (தி.மு.க.,கூட்டணி): விருதுநகரில் முக்கிய பிரமுகர்களை சந்தித்தல்.தங்கராஜ் (அ.ம.மு.க.,கூட்டணி): நகராட்சி 7, 34, 36வது வார்டுகள், ரோசல்பட்டி, ஜமீன்சல்வார்பட்டி, தாதம்பட்டி, முதலிபட்டி .மணிமாறன் (மக்கள் நீதி மய்ய கூட்டணி): விருதுநகர் நகர, ஒன்றிய பகுதிகள்.செல்வக்குமார் (நாம் தமிழர் கட்சி): விருதுநகர் நகர்ப்பகுதிகள்.குணசேகரன் (புதிய தமிழகம்): விருதுநகர் நகர்ப்பகுதிகள். ஸ்ரீவில்லிபுத்துார் மான்ராஜ் (அ.தி.மு.க., கூட்டணி): ஸ்ரீவில்லிபுத்துார் நகர் பகுதிகள்.மாதவராவ் (காங்கிரஸ் கூட்டணி):ஸ்ரீவில்லிபுத்துார்டவுன் , ஒன்றிய பகுதிகள்.அபிநயா (நாம் தமிழர் கட்சி): ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி பகுதிகள்.குருவையா (மக்கள் நீதிமய்யம்): ஸ்ரீவில்லிபுத்துார் ஒன்றிய பகுதிகள். அருப்புக்கோட்டை வைகைச்செல்வன் (அ.தி.மு.க., கூட்டணி): அருப்புக்கோட்டை ஒன்றிய பகுதிகள்சாத்துார் ராமச்சந்திரன் (தி.மு.க., கூட்டணி): பந்தல்குடி, கொப்பு சித்தம்பட்டி, உடையநாதபுரம், ராமச்சந்திராபுரம், வேலாயுதபுரம், ராம் கோநகர்.உமா (நாம் தமிழர் கட்சி): சாத்தூர் ஒன்றியம் நல்லி, உப்பத்தூர், முத்துச்சாமிபுரம், முத்தார்…

Read More

விவசாயிகளுக்கு துரோகம்: காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் பிரசாரம்

விருதுநகர் : விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் பிரதமர் மோடியுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.,வை புறந்தள்ள வேண்டும்,” என, காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் பிரசாரம் செய்தார். விருதுநகர் தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவாசனுக்கு மதுரை, ரோடு, பஜார் வீதிகளில் நடந்து சென்று ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது: வேளாண்மையை குழி தோண்டி புதைக்கும் மத்திய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டில்லியில் 120 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பிரச்னையை தீர்க்க பிரதமர் மோடி முயற்சி எடுக்கவில்லை.விலை வாசி உயர்வு அதிகரித்துள்ளது. நிறைவேறாத வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றும் முயற்சியில் அ.தி.மு.க., உள்ளது, என்றார்.

Read More

தடுக்கலாமே! தலைவர்கள் பிரசாரம்போது நெரிசல்…

சிவகாசி: மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் வருகையின் போது போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களை கட்டி வருகிறது. வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வதற்காக தலைவர்கள் வருகையில் குறிப்பிட்ட இடத்தில் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி அளிப்பர். அந்த இடத்தில் தலைவர்கள், பேச்சாளர்கள் வருவதற்கு 2 மணி நேரத்திற்கும் முன்பாகவே கட்சியினர் திரண்டிருப்பர். அந்த நேரத்தில் ரோடு மறைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலம் பாதிக்கிறது. அவசரத்திற்கு டூ வீலர், கார்களில் செல்கிறவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படுகிறது. மேலும் அதிக வாகனங்களில் கட்சியினர் வருவர் . இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கிறது. அந்த நேரத்தில் போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுத்தி வாகனங்களை வேறு வழியில் செல்ல நடவடிக்கை எடுப்பர். பஸ்களை வேறு வழியில் செல்ல வைப்பதால் வழக்கமான பஸ்…

Read More

விருதுநகரில் பா.ஜ.,க்கு சாதகம்; தேர்தல் பணி கூட்டத்தில் அமைச்சர் பேச்சு

விருதுநகர்: ”உளவுத்துறை அறிக்கையில் விருதுநகர் தொகுதி பா.ஜ.,வுக்கு சாதகமாக இருப்பதாக,” தேர்தல் பணி கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். விருதுநகரில் நடந்த பா.ஜ., நிர்வாகிகளுடனான தேர்தல் பணி ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க., பா.ஜ., நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பா.ஜ., நிர்வாகிகள், அ.தி.மு.க., நிர்வாகிகளை முன்னே வைத்தே பிரசாரங்களுக்கு செல்லுங்கள். தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவாசன் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாலும், உளவுத்துறை அறிக்கை பா.ஜ.,வுக்கு சாதகமாக இருப்பதாலும் நமக்கே வெற்றி உறுதி. 325 ஓட்டுச்சாவடிகளிலும் பூத் முகவர்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், என்றார். பா.ஜ., வேட்பாளர் பாண்டுரங்கன், மாவட்ட தலைவர் கஜேந்திரன்,பென்டகன் உரிமையாளர் ஜவஹர், பொறுப்பாளர் பொன்ராஜன் , அ.தி.மு.க., அவைத்தலைவர் விஜயகுமரன், மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா, ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், ராஜசேகர், இளைஞரணி செயலாளர்…

Read More

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை.. தடுத்து நிறுத்துங்க!

விருதுநகர் : மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்திற்காக சிறுவர், சிறுமியரை பயன்படுத்தி வருவது அதிகரித்துள்ளது. கட்சியனரின் விதிமீறல்களால் குழந்தைகளின் கல்வி பாதிப்படைகிறது. விதிகளை மீறுவோர் மீது மாவட்ட தேர்தல் அலுவலர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலங்களில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை ஈடுபடுத்தக்கூடாது. மீறும் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தை பொறுத்தமட்டில் தேர்தல் விதிகளை முக்கிய கட்சிகள் பின்பற்றுவதில்லை. வழக்கம் போல் பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலங்களில் சிறுவர்களை பயன்படுத்துவது தொடர்கிறது. டூவீலர்களில் சென்று துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பொறுப்பு சிறுமிகளிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆபத்தை உணராமலும், ஹெல்மெட் அணியாமலும் அப்பாவி சிறுமிகள் டூவீலர்களில் சென்று சுட்டெரிக்கும் வெயிலில் வீடு…

Read More

அவர் அமைச்சரே அல்ல ரவுடி, பபூன்; ராஜேந்திர பாலாஜியை சாடிய ஸ்டாலின்

ராஜபாளையம் : ”சிவகாசி மக்களால் விரட்டப்பட்டவர், அவர் ஒரு அமைச்சரே அல்ல ரவுடி, பபூன் ,”என , ராஜபாளையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க.,தலைவர் ஸ்டாலின், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கடுமையாக சாடினார். தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களான சாத்துார் ராமச்சந்திரன்(அருப்புக்கோட்டை தங்கம் தென்னரசு(திருச்சுழி) தங்கபாண்டியன்( ராஜபாளையம்) சீனிவாசன்(விருதுநகர்), அசோகன்(சிவகாசி-காங்.,), ரகுராமன் (சாத்துார்- ம.தி.மு.க.,) மாதவராவ்(ஸ்ரீவி., -காங்.,) ஆகியோரை ஆதரித்து ராஜபாளையத்தில் அவர் பேசியதாவது: உங்களிடம் நான் கேட்க விரும்புவது தி.மு.க.,கூட்டணியில் உள்ள ஏழு வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.விடுதலை வீரர்கள் நிரம்பிய ராஜபாளையம் வந்துள்ளேன். தமிழக அரசின் சின்னமான கோபுரம் தாங்கிய ஸ்ரீவில்லிபுத்துார், காரமான சேவுக்கு பேர் போன சாத்துார். மல்லிகை அரும்பு கோட்டையான அருப்புக்கோட்டை, குட்டி ஜப்பானான சிவகாசி, ரமணர் பிறந்த திருச்சுழி, காமராஜர் பிறந்த விருதுநகர் இப்படி பல பெருமைகளை பெற்றுள்ள தொகுதிகளுக்கு ஓட்டு கேட்டு…

Read More

பிரசாரத்தில் கையசைத்து சென்ற விஜயகாந்த்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் பிரசாரம் செய்ய வந்த தே.முதி.க., தலைவர் விஜயகாந்த் எதுவும் பேசாது கையசைத்தபடி ஓட்டு சேகரித்தார். அருப்புக்கோட்டை தொகுதியில் அ.ம.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளராக போட்டியிடுபவர் ரமேஷ். இவரை ஆதரித்து மரக்கடை பஸ் ஸ்டாப்பில் விஜயகாந்த் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 7:00 மணிக்கு வந்த விஜயகாந்த் வேனில் நின்றப்படி கையை மட்டும் அசைத்து விட்டு ஒன்றும் பேசாமல் சென்றார். அங்கிருந்த வேட்பாளர், கூட்டணி கட்சியினர் ஏமாற்றம் அடைந்தாலும் அவரது உடல் நலன்கருதி பேசாததை புரிந்து கொண்டு, அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Read More

காகித ஏற்றுமதிக்கு தடை விதியுங்க! அச்சக உரிமையாளர்கள் வலியுறுத்தல்

சிவகாசி : ”காகித விலையை குறைக்க ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்,” என, சிவகாசி அச்சக உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிவகாசி பகுதியில் 200க்கு மேற்பட்ட அச்சக ஆலை உள்ளது. 50 ஆயிரம் பேர் நேரடி வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.அச்சுத் தொழிலில் இணை தொழில்களாக லேமினேஷன், ஸ்கோரிங் உள்ளிட்ட தொழில்கள் உள்ளது.சிவகாசியில் அச்சடிக்கப்படும் அச்சுப்பொருட்கள் இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது ஐரோப்பிய நாடுகளுக்கு சிவகாசியிலிருந்துதான் பள்ளி நோட்டுப் புத்தகம் பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அச்சு காகிதம், காகித அட்டை கடுமையான விலை ஏறி வருவதால் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சிவகாசி அச்சக உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. இதில் பேசிய சங்க தலைவர் கணேஷ்குமார்:…

Read More

நரிக்குடி : மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் தீவிரமாக நடக்கிறது

நரிக்குடி : மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் தீவிரமாக நடக்கிறது. எனினும் தபால் ஓட்டு விண்ணப்பங்கள் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் ஒன்பது நாட்களே உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர முனைப்புக்காட்டி வருகிறது. இதற்காக தினமும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. எனினும் தபால் ஓட்டு விண்ணப்பங்களை முறையாக வழங்காமல் மந்த நிலைலேய நீடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாற்றுத்திறனாளிகள், 80 வயதைக் கடந்த முதியவர்களிடம் தபால் ஓட்டுக்களை பெற படிவம் ’12 டி’ ஐ தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரடியாக சென்று வழங்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், போலீசார்களுக்கு அந்தந்த துறை மூலம் படிவம்…

Read More