பிரசாரத்தில் கையசைத்து சென்ற விஜயகாந்த்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் பிரசாரம் செய்ய வந்த தே.முதி.க., தலைவர் விஜயகாந்த் எதுவும் பேசாது கையசைத்தபடி ஓட்டு சேகரித்தார். அருப்புக்கோட்டை தொகுதியில் அ.ம.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளராக போட்டியிடுபவர் ரமேஷ். இவரை ஆதரித்து மரக்கடை பஸ் ஸ்டாப்பில் விஜயகாந்த் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 7:00 மணிக்கு வந்த விஜயகாந்த் வேனில் நின்றப்படி கையை மட்டும் அசைத்து விட்டு ஒன்றும் பேசாமல் சென்றார். அங்கிருந்த வேட்பாளர், கூட்டணி கட்சியினர் ஏமாற்றம் அடைந்தாலும் அவரது உடல் நலன்கருதி பேசாததை புரிந்து கொண்டு, அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Read More

10 ஆண்டு கால கோர பசியில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு : முதல்வர் பழனிசாமி காட்டம்ஆபத்து

அருப்புக்கோட்டை: ”10 ஆண்டு கால கோர பசியில் தி.மு.க., உள்ளது.இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்குதான் ஆபத்து, ”என , விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரம் செய்த முதல்வர் பழனிசாமி பேசினார். திருச்சுழி மூ.மு.க., வேட்பாளர் ராஜசேகர், அருப்புக்கோட்டை அ.தி.மு.க., வேட்பாளர் வைகைச்செல்வன், விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் பாண்டுரங்கன், சிவகாசி அ.தி.மு.க.,வேட்பாளர் லட்சுமி கணேசன்,ஸ்ரீவி.,மான்ராஜ், ராஜபாளையம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சாத்துார் ரவிச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து அந்தந்த தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:ஸ்டாலின் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் அவதுாறாக பேசுகிறார். தலைவர்களை சிறுமைபடுத்தி பேசுகிறார். தி.மு.க., ஆட்சி காலத்தில் அவர் செய்த சாதனைகளை சொல்ல முடியுமா? தி.மு.க., என்றால் பொய், பொய் என்றால் தி.மு.க., கருணாநிதி, ஸ்டாலின் இப்போது உதயநிதி என வாரிசு அரசியல் நடத்துகின்றனர்.எனக்கு தொடர்ந்து பேசி தொண்டை வறண்டு விட்டது.…

Read More

தேர்தல் பயிற்சியால் அலுவலர்கள் அதிருப்தி

அருப்புக்கோட்டை: சட்ட சபை தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல் கட்ட பயிற்சி நடந்த நிலையில், நேற்று 2ம் கட்ட பயிற்சி மாவட்டம் முழுவதும் நடந்தது. தாலுகா அளவிலான அலுவலர்கள், ஆசிரியர்கள் அந்தந்த ஊர்களில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தேர்தல் தோறும் ஓட்டுப் பதிவு இயந்திரம் இயக்கும் முறை, விவி பேட் செயலாக்க பயிற்சி கையேடு வழங்கப்பட்ட நிலையில், விருதுநகர், சாத்துார் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பயிற்சியில் முறையான விளக்கம், கையேடு வழங்கப்படவில்லை.இதனால் ஆசிரியர்கள், அலுவலர்கள் அதிருப்தி அடைந்தனர். கடமைக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பயிற்சி அளிக்கப்பட்டதாக பங்கேற்றோர் புகார் கூறினர்.–

Read More

இலவசங்களால் ஏழ்மையை ஒழிக்க முடியாது

அருப்புக்கோட்டை : இலவசங்களால் ஏழ்மையை ஒழிக்க முடியாது.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற நிரந்தர திட்டத்தை செயல்படுத்துங்கள்”, என ம.நீ.ம.,தலைவர் கமல் பேசினார். அருப்புக்கோட்டையில் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது, ” ஓட்டிற்கு ஆயிரம், 2 ஆயிரம் கொடுக்காதீர்கள். மக்கள் பயன்படும் வகையில் 5 லட்சம் கொடுங்கள். 3 தலைமுறையாக தமிழகம் சீரழிந்து விட்டது. கமல் ஹெலிகாப்டரில் வந்து செல்கிறார். ஏது பணம் என்று கேள்வி கேட்கின்றனர் அது என் சொந்த பணம். நீங்கள் மக்கள் வரி பணத்தில் வந்து செல்கிறீர்கள். நலத்திட்டம் என்ற பெயரில் பணத்தை கொடுத்து விட்டு, அதை டாஸ்மாக் மூலம் கறந்து விடுகிறீர்கள். இலவசங்களால் ஏழ்மையை ஒழிக்க முடியாது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு போன்ற நிரந்தர திட்டங்களை செயல்படுத்துங்கள். மனித வளத்தை மேம்படுத்தினாலே போதுமானது. இந்த தாடி வேண்டுமா, அந்த தாடி (வெள்ளை தாடி) வேண்டுமா?…

Read More

தவறாதீங்க! ஓட்டளிப்பு என்பது ஒவ்வொருவரின் கட்டாயம்; கட்சிகளிடம் பணம் வாங்குவதையும் தவிர்ப்போம்

அருப்புக்கோட்டை : மாவட்டத்தில் ஒவ்வொருவரும் கட்டாயமாக ஓட்டளித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறை வேற்ற வேண்டும்.இதோடு கட்சியினர் தரும் பணத்திற்காக ஓட்டளிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலின் போது பொதுமக்கள் அனைவரும கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்களும் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம், கையெழுத்து இயக்கம், பிட் நோட்டீஸ் என வாக்களிக்க பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் 100 சதவீத ஓட்டுப்பதிவு என்பது எந்த தேர்தலிலும் இல்லை. பொதுமக்களுக்கு தங்கள் ஓட்டின் உரிமை, அதனுடைய ‘பவர்’ வாக்களிப்பதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். படித்தவர்களில் கூட பலர் ஓட்டளிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் உள்ளனர். தங்களுக்கு உரிய ஓட்டை பயன்படுத்தினால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் உரிமையாக பிரச்னைகள் குறித்து பேச முடியும். ஓட்டின் மதிப்பு தெரியாமல்…

Read More

அருப்புக்கோட்டையில் ரூ.1.90 லட்சம் பறிமுதல்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பறக்கும் படையினரால் ரூ.1.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அருப்புக்கோட்டை தேர்தல் பறக்கும் படை குழுவினர் எஸ்.பி.கே. கல்லூரி சாலையில் சோதனை செய்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து சோதனையிட்டனர். ஆவணங்கள் இன்றி ரூ.1.90 லட்சம் வைத்திருந்தது தெரிந்தது. மேலும் விசாரித்ததில் மானாமதுரை பிருந்தாவனம் தெருவை சேர்ந்த வெங்கடேஸ்வரன் 26, ஜெகதீஷ் 23, இருவரும் காந்தி நகர் பிள்ளையார் கோவில் தெரு தனியார் நிறுவனத்தில் பணியாளராக உள்ளனர் என்பதும்,பிடிபட்ட தொகையை காரியாபட்டி, அருப்புக்கோட்டை, புலியூரான், மண்டபசாலை கிராம மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் வசூல் செய்து கொண்டு செல்வதாக கூறினர். ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Read More

அருப்புக்கோட்டை தொகுதி தேமுதிக., வேட்பாளர்

ஆர். ரமேஷ் – அருப்புக்கோட்டை வயது: 46 படிப்பு: எம்.ஏ.,எம்.பிஎட்., தொழில்: விவசாயம், கெமிக்கல் வியாபாரம். குடும்பம்: மனைவி, மகன், மகள். அரசியல் அனுபவம்: 2005 முதல் கட்சி உறுப்பினர், மாவட்ட பட்டதாரி ஆசிரியர் அணி செயலர், நெல்லை மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர். கிடைத்தது எப்படி: உழைப்பு, விசுவாசத்திற்கு கிடைத்தது.

Read More

அருப்புக்கோட்டை தொகுதி கள நிலையை பீதியில் தி.மு.க.,, விரக்தியில் அ.தி.மு.க.,வினர்

அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை தொகுதி கள நிலையை பார்த்து தி.மு.க., பீதியிலும், அ.தி.மு.க.,வினர் விரக்தியிலும் உள்ளனர்.அருப்புக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க., சார்பாக வைகைச்செல்வன், தி.மு.க., சார்பாக சாத்துார் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., போட்டியிடுகின்றனர். இதோடு ம.நீ.ம., சார்பாக உமா தேவி, அ.ம.மு.க.,சார்பாக ஓம்ராஜ் களத்தில் உள்ளனர்.இத்தொகுதியில் நாயக்கர், ரெட்டியார் உள்ளிட்ட தெலுங்கு பேசும் மக்கள் 33 சதவீதம் உள்ளனர். தேவர், பட்டியல் இனத்தவர் தலா 10 சதவீதம், முத்தரையர், தேவாங்கர் தலா 9சதவீதம், சாலியர் 6, இதர சமுதாயத்தினர் 17 சதவீதம் உள்ளனர்.தெலுங்கு பேசுபவர்கள் 33 சதவீதம் இருப்பதால் இவர்கள் ஓட்டுக்களை அறுவடை செய்ய அனைத்து வேட்பாளர்களும் முனைப்பில் உள்ளனர்.அ.தி.மு.க., வேட்பாளர் வைகைசெல்வன் மீதுள்ள அதிருப்தியில் எளிதில் வெற்று பெறலாம் என தி.மு.க., வேட்பாளரும், 2011-16ல் எம்.எல்.ஏ., வாக இருந்த போது செய்தி சாதனைகளை கூறி மீண்டும் வெற்றி பெறலாம் என…

Read More

மகளிர் தின ஓரங்க நாடகம்

அருப்புக்கோட்டைஅருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் ‘பெண்ணியம்’ என்ற தலைப்பில் மதுரை வேளாண் கல்லுாரி மாணவியர் மகளிர் தினத்தை கொண்டாடினர். பெண் கல்வியை வலியுறுத்தி நாடகம் நடந்தது. பெண்ணுரிமை, பெண் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் உட்பட குறித்து மாணவிகள் பேசினர். பந்தல்குடி ஊராட்சி துணை தலைவர் அய்யரப்பன், மகளிர் சுய உதவி குழு தலைவி வேணி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாணவிகள் விமலா, வினிதா, அங்கயர்கண்ணி, காயத்திரி, ஹர்ஷிதா, கார்த்திகா

Read More

மழை நீரை சேமித்து பயன்படுத்த ைஹட்ரோஜெல் தொழில் நுட்பம்

அருப்புக்கோட்டை; மானாவாரி விவசாய நிலங்களில் மழை நீரை சேமித்து பயிர்களுக்கு பயன்படுத்துவதற்காக ைஹட்ரோஜெல் எனும் தொழில் நுட்பத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சி துறை அறிமுகம் செய்துள்ளதாக வேளாண் மாணவிகள் தெரிவித்தனர். அருப்புக்கோட்டை வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.இதில் கலந்து கொண்ட மதுரை வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள் விமலா, வினிதா, அங்கையர்கண்ணி, காயத்திரி, கார்த்திகா, ஹர்ஷிதா , வறண்ட நிலப்பகுதியான விருதுநகர் மாவட்டத்தில் நீர் சிக்கனத்தை மேம்படுத்தும் வகையில் புதிய வேளாண் தொழில் நுட்பமான ைஹட்ரோஜெல் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது: மானாவாரி விவசாய நிலங்களில் மழை நீரை சேமித்து பயிர்களுக்கு பயன்படுத்துவதற்காக ைஹட்ரோஜெல் எனும் வேதிப் பொருளை இந்திய வேளாண் ஆராய்ச்சி துறை அறிமுகம் செய்துள்ளது.இந்த ஜெல் பழுப்பு நிறத்தில் சவ்வரிசி போன்று இருக்கும். இதன் மீது…

Read More