சென்னை மாநகரப் பேருந்துகளில் முதியவர்கள் இலவசப் பயணம்: இன்று முதல் டோக்கன்

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முதியவர்கள் இலவசமாக பயணம் செய்ய, இன்று முதல் டோக்கன்களைப் பெறலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சென்னையில் முதியவர்களுக்கு, இலவச பேருந்துப் பயண டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று முதல் கட்டணமில்லா பயண டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், டோக்கன் பெறுவதற்காக, போக்குவரத்து கழகத்தின் https://mtcbus.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தகுதிவாய்ந்த முதியவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மையங்களில் டோக்கன்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள 21 பணிமனைகள் மற்றும்19 பேருந்து நிலையங்களில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு 10 வீதம், ஆறு மாதங்களுக்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது.

Read More

#வண்ணாரப்பேட்டை#மெட்ரோரயில்#பயணம்

வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் மெட்ரோ ரயில் பயணிக்க துவங்கியதையடுத்து பயணம் செய்ய ஆர்வத்துடன் குவிந்த பொதுமக்கள். இடம்- திருவொற்றியூர்.

Read More

சென்னை மாநகராட்சி அதிரடி  அறிவிப்பு

சென்னை மாநகராட்சி அதிரடி  அறிவிப்பு ஜன.1 முதல் குப்பை கொட்ட கட்டணம் வீடுகளுக்கு மாதம் ரூ.10 முதல் ரூ.100 வரை வசூலிக்கப்படும்

Read More

ஏழு தேர்வுக்கான ‘ரிசல்ட்’; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை : ‘குரூப் – 2’ உட்பட அரசு துறை பணிகளுக்கான ஏழு வகை தேர்வுகளின் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘குரூப் – 2’ நேர்காணல் தேர்வு உள்ள பதவிகளில் 1334 காலியிடங்களை நிரப்ப 2019 பிப்ரவரி 23ல் போட்டி தேர்வு நடந்தது. இதில் 14 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 19ல் நேர்காணல் நடத்தப்படும். தமிழக தகவல் தொழில்நுட்ப துறையில் உதவி கணினி ஆய்வாளர் பணியில் 60 பணியிடங்களை நிரப்ப 2019 ஏப்ரலில் தேர்வு நடந்தது. இதில் 14 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களின் மதிப்பெண் தரவரிசை வெளியிடப்பட்டு உள்ளது. கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 19 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மற்றும்…

Read More

“அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு”.. கமல் உருக்கம்

சென்னை: “அன்னைய்யா எஸ்பிபியின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு, ஏழு தலைமுறைக்கும் எஸ்பி பாலசுப்ரமணியம் புகழ் வாழும்” என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உருக்கமாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே சென்னை அமைந்தகரை சென்னை எம்ஜிஎம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார் எஸ்பிபி.. அவரது உடல்நிலை சற்று தேறி வந்த நிலையில், திடீரென ஆஸ்பத்திரி நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எஸ்பிபி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து கமல்ஹாசன் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.. அங்கு சென்ற அவர், எஸ்பிபி உடல்நிலை குறித்து…

Read More

ரயில்வே துறையான சென்னை ஐசிஎப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை : ரயில்வே துறையான சென்னை ஐசிஎப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ரயில்வே பணியிடங்களில் தமிழர்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரயில்பெட்டி தயாரிக்கும் ஆலையில் 990 இடங்களுக்கு ஐடிஐ படித்த தமிழர்கள் விண்ணப்பிக்க செப் 25 தேதி கடைசி நாள் ஆகும்.

Read More

டிச., வரை சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு

சென்னை: வரும் டிசம்பர் மாதம் வரையில் அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. அரசு அலுவலகங்களும் மூடப்பட்டதால் அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் செப்.,1 முதல் மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியது. வருகிற 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து தொடங்க இருக்கிறது. மேலும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.…

Read More