பத்மஸ்ரீ விருது கிடைத்தது கூட அறியாத ஒரு அறியாமையாளர்தான் கூடையில் ஆரஞ்சுப்பழம் கூவிக்கூவி விற்கும் ஏழை ஹஜப்பா

பத்மஸ்ரீ விருது கிடைத்தது கூட அறியாத ஒரு அறியாமையாளர்தான் கூடையில் ஆரஞ்சுப்பழம் கூவிக்கூவி விற்கும் ஏழை ஹஜப்பா..ஆனால் புண்ணியம் கோடிக்குசொந்தக்காரர்!2020-ஆம் ஆண்டு குடியரசு தினத்துக்கு முதல் நாள். அன்று சனிக்கிழமை. அழுக்கேறிய உடைகளுடன் ரேஷன் கடை வரிசையில் பொருட்கள் வாங்க சோர்வோடு நின்று கொண்டிருந்தார் ஹரேகலா ஹஜப்பா. கூட்டம் நிறைய இருந்தது. 35 கிலோ ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் கொடுத்துவிட்டு அவர் தன்னுடைய ஆரஞ்சுப் பழ வியாபாரத்திற்குச் செல்ல வேண்டும். அப்போது அவரது செல்போன் சிணுங்கியது. இந்த வேளையில் நம்மை அழைப்பது யார் என்று புரியாமல் செல்போனை எடுத்து, “யார் பேசுறீங்க?” என்று கேட்டார்.அதில் ஒலித்த குரல் ஹிந்தியில் இருந்தது.யார் எங்கிருந்து பேசுகிறார்கள் என்று புரியாமல், பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவரை அழைத்துத் தன்னுடைய செல்போனைக் கொடுத்து “யார் பேசுவது என்று புரியவில்லை. தயவு…

Read More

WhatsappNewPolicy

வாட்ஸ்அப் தனது Terms and Privacy Policy மாற்றியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் தங்களது பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷனை அனுப்பி வருகிறது.அது என்னவென்றால் ” WhatApp is updating its terms and privacy policy” என்ற வரிகள் உள்ளது. வாட்ஸ்அப்-ன் Terms and Privacy Policy Updates -ஐ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இதற்கு பயனாளர்கள் அனுமதிக்கவில்லை என்றால் அவர்களின் கணக்கு நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறை பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் வாட்ஸ் அப் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும் பொருந்தும். நீங்கள் பின்னர் ஓகே செய்கிறேன் என இருந்தாலும் வரும் பிப்ரவரி 8 -ஆம் தேதிக்குள் இதை நீங்கள் செய்தாக வேண்டும். அவ்வாறு ஏற்காவிட்டால் உங்களால் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது. வாட்ஸ்அப்…

Read More

அப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்

அப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்!ஷ்யாம் சுத்தர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவருடைய மகள் பிரசாந்தி குண்டூரில் DSP யாக பணி நியமனம் பெற்று வரும் நிலையில்.காவல்துறையில் இன்ஸ்பெக்டராக உள்ள அப்பா, டிஎஸ்பியான தன்னுடைய மகளை பார்த்தவுடன் சல்யூட் அடித்த நிகழ்ச்சி பெண்பிள்ளைகளை பெற்ற அப்பாக்களுக்கு தன் பிள்ளைகள் உச்சத்தை தொடும் போது உணரும் ஆனந்தம் அளவில்லாதது என்பதை உணர்த்துவதாக அமைந்த புகைப்படம்.

Read More

ஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்!

டெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மொத்தம் 2.4 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையினால், 1.2 லட்சம் ஊழியர்கள் பயன் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த பதவி உயர்வானது வரும் செப்டம்பர் மாதத்தில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியிலும் மிக வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் பல புதிய ஒப்பந்தங்களை போட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. இதன் காரணமாக இந்த ஊக்குவிப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த பதவி உயர்வனானது பெரும்பாலும் ஜூனியர் லெவல் ஊழியர்கள் மற்றும் நடுத்தர உழியர்களுக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ்…

Read More

Sylendra Babu IPS

கண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத் தேர்வு பயிற்ச்சி அளித்ததில் பெருமை நமக்கு. Congratulations to Poornasundari for the untiring effort to clear IAS exam. No eye sight but you have the mind sight to be a champion.

Read More

25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..!

இந்திய பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் முக்கியத் தூண் ஆக விளங்கும் ஐடி துறையைக் கொரோனா தொற்று தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது என்றால் மிகையில்லை. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருப்பதால் ஐடி சேவைத் துறை புதிய வர்த்தகம் எதுவும் கிடைக்காமல் தடுமாறி வருகிறது. இதனால் அடுத்தடுத்த காலாண்டு வரையில் ஐடி நிறுவனங்களின் வர்த்தகம், வருவாய், லாப அளவீடுகள் அனைத்தும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்புக் காரணமாக இந்தியா முழுவதும் இருக்கும் ஐடி ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐடி நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைக்க ஊழியர்களுக்கு நிரந்தரமாகவே வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுக்கக் கடந்த சில மாதங்களாகவே ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா முக்கியமான முடிவை எடுத்துள்ளது. ஐடி நிறுவனங்கள்…

Read More

The most effective natural #medicine #tips

மிகவும் பயனுள்ள இயற்கை #மருத்துவ#குறிப்புகள் 1.நெஞ்சு சளி:தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2.தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3.தொண்டை கரகரப்பு: சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4.தொடர் விக்கல்:நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்… 5.வாய் நாற்றம்: சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். 6.உதட்டு வெடிப்பு: கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய்…

Read More