அவர் அமைச்சரே அல்ல ரவுடி, பபூன்; ராஜேந்திர பாலாஜியை சாடிய ஸ்டாலின்

ராஜபாளையம் : ”சிவகாசி மக்களால் விரட்டப்பட்டவர், அவர் ஒரு அமைச்சரே அல்ல ரவுடி, பபூன் ,”என , ராஜபாளையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க.,தலைவர் ஸ்டாலின், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கடுமையாக சாடினார். தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களான சாத்துார் ராமச்சந்திரன்(அருப்புக்கோட்டை தங்கம் தென்னரசு(திருச்சுழி) தங்கபாண்டியன்( ராஜபாளையம்) சீனிவாசன்(விருதுநகர்), அசோகன்(சிவகாசி-காங்.,), ரகுராமன் (சாத்துார்- ம.தி.மு.க.,) மாதவராவ்(ஸ்ரீவி., -காங்.,) ஆகியோரை ஆதரித்து ராஜபாளையத்தில் அவர் பேசியதாவது: உங்களிடம் நான் கேட்க விரும்புவது தி.மு.க.,கூட்டணியில் உள்ள ஏழு வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.விடுதலை வீரர்கள் நிரம்பிய ராஜபாளையம் வந்துள்ளேன். தமிழக அரசின் சின்னமான கோபுரம் தாங்கிய ஸ்ரீவில்லிபுத்துார், காரமான சேவுக்கு பேர் போன சாத்துார். மல்லிகை அரும்பு கோட்டையான அருப்புக்கோட்டை, குட்டி ஜப்பானான சிவகாசி, ரமணர் பிறந்த திருச்சுழி, காமராஜர் பிறந்த விருதுநகர் இப்படி பல பெருமைகளை பெற்றுள்ள தொகுதிகளுக்கு ஓட்டு கேட்டு…

Read More

விழிப்பில்லை: கொரோனா தடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம்

ராஜபாளையம், மார்ச் 27-விருதுநகர் மாவட்டத்தில் தேர்தலால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் அலட்சியம் தொடரும் நிலையில், போதிய விழிப்புணர்வின்றி மக்களும் கூட்டமாக கூடுவதால் தொற்று வாய்ப்பு அதிகரிக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2020 மார்ச் இறுதி முதல் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொது மக்களின் உயிர்காக்க பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு ஊராட்சி அளவில் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த உடன் தளர்கவுகள் அறிவிக்கப்பட்டு சகஜ நிலை திரம்பியது.ஆனால் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொற்று எண்ணிக்கை உயர்வதுடன் தமிழகத்திலும் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டன.இதையடுத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வந்தாலும் அதிகாரிகள் அளவில் முழுமையான நடவடிக்கையின்றி அல்டசியமே தொடர்கிறது. மக்கள் பலரும் முக்கவசம்,சமூகஇடைவெளியை பின்பற்றாது உள்ளனர்.தேர்தல் காலம் என்பதால் இதன் மீது போலீஸ் முதல் அதிகாரிகள் வரை நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பொது…

Read More

சட்டசபை வந்ததும் வெளியேறி விடுவார்: தி.மு.க., வேட்பாளர் குறித்து அமைச்சர் நக்கல்

ராஜபாளையம்: ”சட்டசபை வரும் தி.மு.க., வேட்பாளரான இங்குள்ள எம்.எல்.ஏ., சட்டசபை துவங்கியதும் வெளியேறி விடுவார்.தொகுதி பிரச்னைகள் குறித்து பேசமாட்டார்,” என, ராஜபாளையம் அ.தி.மு.க., வேட்பாளரான அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார். ராஜபாளையத்தில் பல்வேறு சமுதாய தலைவர்களை சந்தித்து ஓட்டு சேகரித்த அவர், தளவாய்புரம், முகவூர், செட்டியார்பட்டி, மீனாட்சி புரம், பஞ்சம்பட்டி கிராம பகுதி சமுதாய நிர்வாகிகள், பொது மக்களை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது அவர் பேசியதாவது: ராஜபாளையம்தொகுதி மக்கள் அளிக்கும் வரவேற்பு 1972 காலங்களில் எம்.ஜி.ஆர்., ஜெ., போன்ற தலைவர் களுக்கு அளிப்பது போல் ஆரவாரமாக உள்ளது. 10 ஆண்டுகாலம் அமைச்சராக இருந்தபோது ராஜபாளையம் கிராமப்புறங்களுக்கு முக்கூடல் குடிநீர் திட்டம், நகர்ப்பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். ரூ.50 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.செட்டியார்பட்டி, சேத்துார் பேரூராட்சி…

Read More

ராஜபாளையம் செல்ல பாலம்

ராஜபாளையம் : ”நக்கனேரியிலிருந்து ராஜபாளையம் செல்வதற்கு பாலம்,தார்ச்சாலை அமைக்கப்படும்,” என, ராஜபாளையம் தொகுதி தி.மு.க., வேட்பாளரான தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., உறுதி அளித்தார். நேற்று மாலை 5:00 மணிக்கு ராஜபாளையம் தொகுதிக்குட்பட்ட சுந்தரராஜபுரம், கணபதி சுந்தரநாச்சியார்புரம், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், இளந்திரைகொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், அயன் கொல்லங்கொண்டான், நக்கனேரி, தெற்கு வெங்காநல்லுார், சிதம்பராபுரம் மற்றும் பட்டியூர் கிராமம் வரை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது: உள்ளூர் வேட்பாளரான நான் உங்களுக்கு நன்கு தெரிந்தவர். இந்த மண்ணின் மைந்தன். உங்கள் வீட்டுப்பிள்ளை. என்னை எங்கும் எப்போதும் சந்திக்கலாம். சுந்தரராஜபுரம் ஊராட்சி கோரிக்கையான ரேஷன் கடைக்கு எம்.எல்.ஏ., நிதியிலிருந்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. செட்டியார்பட்டியிலிருந்து அம்மையப்பபுரம் வழியாக இளந்திரை கொண்டானுக்கு தார்ச்சாலைக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. நக்கனேரியிலிருந்து ராஜபாளையம் செல்வதற்கு பாலம்,தார்ச்சாலை வேண்டும் என்ற பொது மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். கிருஷ்ணாபுரம், நக்கனேரி உள்ளிட்ட…

Read More

சேத்தூர் நகராட்சியாக தரம் உயத்தப்படும்; அமைச்சர் உறுதி

ராஜபாளையம் : சேத்துார் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயத்தப்படும் என தேர்தல் பிரசாரத்தில் ராஜபாளையம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உறுதியளித்தார். ஜமீன்கொல்லங்கொண்டான், தேவதானம், சேத்துார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது: ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துாரில் முக்கூடல் கூட்டு குடிநீர் திட்டம், சிவகாசி, சாத்துாரில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழியில் வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரவேண்டும் என சட்டசபையில் ஜெ.,விடம் கோரிக்கை வைத்தேன். இதன் பயனாக சேத்துாரில் முக்கூடல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு பூஜை போட்டு ஆரம்பித்தேன். இன்று அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணித் தண்ணீர் வருகிறது.சேத்துார் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த தேவையான நடவடிக்கை எடுப்பேன்என்றார்.ராஜபாளையம்நகரசெயலாளர் ரானாபாஸ்கரராஜ், ஜெ., பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், இளைஞரணி செயலாளர் துரைமுருகேசன்,வர்த்தக அணி செயலாளர் ராதாகிருஷ்ணன்ராஜா பங்கேற்றனர்.

Read More

பொற்கால ஆட்சியை தந்தவர்: முதல்வர்அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரசாரம்

ராஜபாளையம்; ”தமிழகத்தில் முதல்வர் பொற்கால ஆட்சியை கொடுத்து வருகிறார்,” என தேர்தல் பிர்சாரத்தின்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். ராஜபாளையம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் இவர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட எம்.பி.கே புதுப்பட்டி, தெற்கு வெங்காநல்லுார், நக்கனேரி, அயன் கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், சுந்தரர் நாச்சியார்புரம, வடக்கு தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., ஜெ., வழியில் தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகின்றனர்.ஏழை மக்களின் நாடி துடிப்புகளை அறிந்து திட்டங்களை அ.தி.மு.க., அரசு செயல்படுத்தி வருவதுடன் ஏழைகளுக்கான அரசாகதான் இயங்கி கொண்டிருருக்கிறது.இந்த அரசு தொடர்ந்திட இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். முதல்வரின் உத்தரவின் படி பொங்கல் பரிசாக அனைவருக்கும் ரூ.2500 வழங்கப்பட்டது. இனி ஆண்டுக்கு 6 சிலிண்டர், குடும்ப…

Read More

அனைத்து திட்டங்களும் என்னால்தான் வந்தது: தி.மு.க., வேட்பாளர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., பிரசாரம்

ராஜபாளையம்: ”ராஜபாளையத்தில் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் என்னால் தான் வந்தது ,” என தி.மு.க.,வேட்பாளர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., தெரிவித்தார். ராஜபாளையம் தொகுதியில் தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., தங்கப்பாண்யடின் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். சேத்துார் ஆதிபுத்திரங்கொண்ட அய்யனார் கோயிலில் வழிபட்ட பின் ராஜபாளையம் பச்சமடம் தெருவில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். வழியில் தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.பிரசாரத்தில் அவர் பேசியதாவது: ராஜபாளையத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடை, கூட்டுக் குடிநீர் திட்டம், புறவழிச் சாலைத் திட்டம் அனைத்து திட்டங்களும் கொண்டு வந்தது தி.மு.க., எம்.எல்.ஏ., வான நான் தான்.வாக்காளர்கள் மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். இன்னும் ஏராளமான பணிகள் செய்ய வேண்டியுள்ளது. இந்த மண்ணில் பிறந்த, இந்த மண்ணின் மைந்தனான எனக்கு வாய்ப்பளிக்கும் போது ராஜபாளையம் அரசு மருத்துவமனையை ஹைடெக்…

Read More

3232 கி.மீ., விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

ராஜபாளையம், : சென்னை கொரட்டூர் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த சதீஷ் குமார் 29, போலியோ சொட்டு மருந்து அவசியம் குறித்து விழிப்புணர்வுஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக 3232 கி. மீ., சைக்கிள் பயணத்தை சென்னையில் தொடங்கி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக மீண்டும் சென்னை திரும்புகிறார். வழியில்ராஜபாளையம் ரோட்டரி கிங் சிட்டி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.உறுப்பினர்கள் வள்ளிநாயகம், கோபாலகிருஷ்ணன், சிவகுமார்,செல்வா, பீம்ஆனந்த் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தீபா மோட்டார்ஸ் முத்துகுமார் செய்திருந்தார்.

Read More

போச்சு பயம்! கூட்டம் கூட்டமாக முண்டியடிக்கும் மக்கள் …. தொற்று பரவலை கண்டு கொள்ளாது அசட்டை

ராஜபாளையம் : தேர்தல் நடக்கும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கட்சியினர் , பொது இடங்களில் கூடுபவர்களால் மற்றவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் குறித்து அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் சாமானிய மக்கள் பாதிக்கும் நிலை உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய ,மாநில அரசுகள் சில தளர்வுகளுடன் நீடித்துள்ளன. கொரோனா ஆரம்ப கட்டத்திலிருந்தே பொது மக்களுக்கான விதிமுறைகளை வலியுறுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. தொற்று தடுப்பு விதிமுறைகளை கண்டு கொள்ளவில்லை. ஆரம்பத்தில் இருந்த பதட்டம் தற்போது மக்களிடையே குறைந்து வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை. இவற்றை கண்காணிக்க வேண்டிய போலீசாரும் கண்வுகொள்வதில்லை. தேர்தல் அறிவிப்பதால் பேரணிகள், பிரசார கூட்டங்களும் அரசியல் கட்சியினரால் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பொது மக்கள்…

Read More

தேசிய பாதுகாப்பு தினம்

ராஜபாளையம்: ராஜபாளையம் மில்ஸ் வளாகத்தில் 50 வது தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.ராம்கோ குரூப் முதன்மை செயல் அதிகாரி மோகனரெங்கன் தலைமை வகித்தார். நுாற்பாலைகள் துணைத் தலைவர் நாகராஜன் வரவேற்றார். சிவகாசி தொழிலக பாதுகாப்பு சுகாதார இணை இயக்குனர் வேலுமணி பேசினார்.ராஜபாளையம் மில்ஸ் முதன்மை மேலாளர் பாலாஜி உறுதிமொழி வாசித்தார். தொழிலாளர்களுக்க உடல் பரிசோதனைமுகாம் நடத்தப்பட்டு பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.பாதுகாப்பு அதிகாரி மனோஜ் செல்வ காந்தி நன்றி கூறினார்.

Read More