கோயில் அருகே டாஸ்மாக்; ஆக்கிரமிப்பு; சிரமத்தில் சிவன் கோயில் மாட வீதி மக்கள்

சிவகாசி : ஆக்கிரமிப்பால் அல்லல்படும் பக்தர்கள், கோயில் அருகே டாஸ்மாக்,வணிக வளாகத்தில் செயல்படாத சுகாதார வளாகம் என சிவகாசி சிவன் கோயில் மாட வீதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர். சிவன் கோயிலை சுற்றிலும் கடைகள், குடியிருப்புகள் உள்ளன. இங்கு கோயில் மாட வீதி, குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை துார்வாரவில்லை. குப்பையால் சாக்கடை நீர் தேங்கி சுகாதார கேட்டினை ஏற்படுத்துகிறது.சில இடங்களில் சாக்கடை துார்வாரப்பட்டும் கழிவுகள் அங்கேயே போடப்படுவதால் மீண்டும் சாக்கடையிலே குப்பை விழுகிறது. கோயில் முன்புறம் கடைகள், டூவீலர்களின் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

Read More

தடுக்கலாமே! தலைவர்கள் பிரசாரம்போது நெரிசல்…

சிவகாசி: மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் வருகையின் போது போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களை கட்டி வருகிறது. வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வதற்காக தலைவர்கள் வருகையில் குறிப்பிட்ட இடத்தில் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி அளிப்பர். அந்த இடத்தில் தலைவர்கள், பேச்சாளர்கள் வருவதற்கு 2 மணி நேரத்திற்கும் முன்பாகவே கட்சியினர் திரண்டிருப்பர். அந்த நேரத்தில் ரோடு மறைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலம் பாதிக்கிறது. அவசரத்திற்கு டூ வீலர், கார்களில் செல்கிறவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படுகிறது. மேலும் அதிக வாகனங்களில் கட்சியினர் வருவர் . இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கிறது. அந்த நேரத்தில் போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுத்தி வாகனங்களை வேறு வழியில் செல்ல நடவடிக்கை எடுப்பர். பஸ்களை வேறு வழியில் செல்ல வைப்பதால் வழக்கமான பஸ்…

Read More

காகித ஏற்றுமதிக்கு தடை விதியுங்க! அச்சக உரிமையாளர்கள் வலியுறுத்தல்

சிவகாசி : ”காகித விலையை குறைக்க ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்,” என, சிவகாசி அச்சக உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிவகாசி பகுதியில் 200க்கு மேற்பட்ட அச்சக ஆலை உள்ளது. 50 ஆயிரம் பேர் நேரடி வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.அச்சுத் தொழிலில் இணை தொழில்களாக லேமினேஷன், ஸ்கோரிங் உள்ளிட்ட தொழில்கள் உள்ளது.சிவகாசியில் அச்சடிக்கப்படும் அச்சுப்பொருட்கள் இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது ஐரோப்பிய நாடுகளுக்கு சிவகாசியிலிருந்துதான் பள்ளி நோட்டுப் புத்தகம் பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அச்சு காகிதம், காகித அட்டை கடுமையான விலை ஏறி வருவதால் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சிவகாசி அச்சக உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. இதில் பேசிய சங்க தலைவர் கணேஷ்குமார்:…

Read More

வேட்பாளர்கள் இன்று

விருதுநகர்பாண்டுரங்கன் (பா.ஜ.,): சத்திரரெட்டியபட்டி, லட்சுமிநகர் பகுதிகள், பங்கேற்பு: பா.ஜ., மாநில செயலாளர் மகாலட்சுமி, நடிகை நமிதா.சீனிவாசன் (தி.மு.க.,): பாறைப்பட்டி, கிருஷ்ணாபுரம், கம்மாபட்டி, மேலகுளத்துப்பட்டி. சிவகாசி வடக்கு ஒன்றிய பகுதிகள்.தங்கராஜ் (அ.ம.மு.க.,): பாத்திமாநகர், அவ்வையார் தெரு, வீரசெல்லையாபுரம், அழகாபுரி, மீசலுார் உள்ளிட்ட பகுதிகள்.மணிமாறன் (ச.ம.க.,): என்.ஜி.ஓ.,காலனி, வடமலைக்குறிச்சி, சத்திரரெட்டியபட்டி .செல்வக்குமார் (நாம் தமிழர் கட்சி): இனாம்ரெட்டியபட்டி, பட்டம்புதுார், மருளூத்து, சூலக்கரை.குணசேகரன் (புதிய தமிழகம்): விருதுநகர் நகர்ப்பகுதிகள்.ஸ்ரீவில்லிபுத்துார்மான்ராஜ் (அ.தி.மு.க.,): வன்னியம்பட்டி சுற்று கிராமங்கள்.மாதவராவ் (காங்கிரஸ்): சுந்தரபாண்டியம், நத்தம்பட்டி சுற்று கிராமங்கள்.அபிநயா (நாம் தமிழர் கட்சி): நத்தம்பட்டி சுற்று கிராமங்கள்.சிவகாசிலட்சுமி கணேசன் (அ.தி.மு.க., ): துரைச்சாமிபுரம், கோட்டைமேடு, அம்மாபட்டி, மணியம்பட்டி, ஊராம்பட்டி, பர்மா காலனி, விளாம்பட்டி, பூலாவூரணி ஏ.துலுக்கப்பட்டி .ஜி.அசோகன் (காங்.,): முண்டகன் தெரு, பி.கே.எஸ்.தெரு, தில்லை சிதம்பரம் தெரு, ஏழுகோயில் தெரு, அனந்தப்பன் தெரு, வெள்ளஞ்சாமியார் தெரு, மணி நகர்.…

Read More

ஓட்டளிப்பை வலியுறுத்தி ‘ ஹீலியம்’ பலுான்

சிவகாசி : 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி சிவகாசி பஸ் ஸ்டாண்டில் ஹூலியம் பலுான் பறக்கவிடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார்வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஹூலியம் பலுானில் 100 சதவீதம் ஓட்டளிப்போம், ஓட்டளிப்பது நமது உரிமை, எங்கள் ஓட்டு விற்பனைக்கல்ல போன்ற வாசகங்கள் எழுதப்பட்டு பறக்கவிடப்பட்டது.திட்ட இயக்குநர் ஜெயக்குமார், நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்மோகன், ராமராஜ் கலந்து கொண்டனர்.

Read More

சிவகாசியில் தி.மு.க., கூட்டணி கூட்டம்: காங்., வேட்பாளர் அசோகன் வெற்றி பெற வேண்டுகோள்

சிவகாசி: ‘சிவகாசி காங்., வேட்பாளர் அசோகன் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்,” என, மாவட்ட தி.மு.க.,செயலாளர்கள் சாத்துார்ராமச்சந்திரன் ,தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்தனர்.சிவகாசியில் நடந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி காங்., வேட்டாளர் அசோகனை ஆதரித்து எம்.எல்.ஏ., சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது: காங்., ஐகூட்டணி கட்சி என நினைக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வெற்றி பெற உழைக்க வேண்டும். 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜி.அசோகன் வெற்றி பெற வேண்டும்.குட்டி ஜப்பான் சிவகாசி குட்டிச்சுவராக மாறிவிட்டது. ரோடு சரியில்லை, குடிநீர் இல்லை. சிவகாசியில் நாம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிதான். ஏனெனில் அவர் இங்கு ஒன்றுமே செய்யவில்லை. காங்., வேட்பாளர் ஜி.அசோகன் சிவகாசி மக்களுக்காக உண்மையாக உழைப்பார்,என்றார்.தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.,: சிவகாசி மக்களின், தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர் வேட்பாளர்…

Read More

வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி

சிவகாசி : அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணித்திட்டம், உடற்கல்வித்துறை, செஞ்சிலுவைச்சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம், மனிதச் சங்கிலி, தொடர் ஓட்டம், மினிமாரத்தான் நடந்தது. ஊர்வலத்தை கல்லுாரி முதல்வர் காந்திமதி துவக்கி வைத்தார். சப் கலெக்டர் அலுவலகத்திலிருந்து டவுன் போலீஸ் ஸ்டேஷன் வரை மனித சங்கிலி நடந்தது. தொடர்ந்து தொடர் ஓட்டம், மினி மாரத்தான் நடந்தது. சப் கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். தாசில்தார் ராமசுப்பிரமணியன், ஆர்.ஐ., கிருஷ்ணமூர்த்தி, வி.ஏ.ஓ., பாண்டியன், கல்லுாரி விலங்கியல் துறைத்தலைவர் ராமதாஸ், தாவரவியல் துறை தலைவர் வைரமுத்து, தமிழ்த்துறை தலைவர் கிளிராஜ், வரலாற்றுத் துறை தலைவர் குமார் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கணேச முருகன், உடற்கல்வி இயக்குனர் சாந்தி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Read More

100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி உணவு பாதுகாப்புத்துறை கேக் கண்காட்சி

சிவகாசி : சிவகாசி ஸ்பார்க்ளின் ஓட்டலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி உணவு பாதுகாப்புத்துறை சார்பில்கேக் கண்காட்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் கண்ணன் துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்காளர்கள் ஓட்டளிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இது வாக்காளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவின் தாக்கத்திலிருந்து இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து குறைந்தது 6 அடி சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்க வேண்டும் என்றார்.சிவகாசி சிவன் கோவில் அருகில் சிவகாசி முகநுால் நண்பர்கள், அதிர்வு தமிழிசையகம் இணைந்து மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைத்து, தப்பாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மின்னணு வீடியோ வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படம் ஒளிப்பரப்பானது.…

Read More

பிரமுகர்களிடம் ஆதரவு திரட்டிய அ.தி.மு.க., வேட்பாளர்

சிவகாசி : சிவகாசி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லட்சுமி கணேசன் முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார். சிவகாசி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக லட்சுமி கணேசன் போட்டியிடுகிறார். மார்ச் 12ல் சிவகாசி, திருத்தங்கல்லில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை துவக்கினார்.முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் சந்தித்து லட்சுமி கணேசன் ஆசி பெற்றார். த.மா.க., மாவட்ட தலைவர் ஜி.வி.கார்த்திக், நிர்வாகி ராஜபாண்டியன், தொழிலதிபர்கள் ஏ.எஸ்.ராஜப்பன், அருண், செண்பகமூர்த்தி, ஆசைத்தம்பி, ஏ.ஆர்.டி.ஜெயராஜ், அரிராம் சுந்தரவேல், சேட்டுகள் சங்க தலைவர் தர்கார் சேட், தேவர் சமுதாய நிர்வாகிகள் சிங்கராஜ், யுவராஜ், சேனைத்தலைவர் உறவின் முறை நிர்வாகிகள் ஞானம் ஆகியோரை சந்தித்து லட்சுமி கணேசன் வாழ்த்து பெற்று ஓட்டு சேகரித்தார். நகர செயலாளர்கள் அசன் பதுரூதீன், பொன்சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், பலராம்,…

Read More

சிவகாசி தொகுதி தி.மு.க., கூட்டணி கட்சி காங்., வேட்பாளர் விபரம்

பெயர்: ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன் படிப்பு; பி.காம் வயது: 61 குடும்பம்: மனைவி, ஒரு மகன், ஒரு மகள் தொழில்: பட்டாசு தொழிற்சாலை, அலுமினிய பவுடர் ஆலை, தீப்பெட்டி ஆலை, டெக்ஸ்டைல்ஸ், கல்வி நிறுவனங்கள் அரசியல் அனுபவம்: காங்., சேவாதள உறுப்பினர், 2006 முதல் 2011 வரை சிவகாசி நகராட்சி துணை சேர்மன் , இவரது தந்தை , சகோதரர் பாரம்பரிய காங்., கட்சியினர்.கிடைத்தது எப்படி: சிவகாசி தொகுதியில் நல்ல அறிமுகம், சமுதாய ஓட்டு வங்கி, பொதுவாழ்வில் ஈடுபாடு.

Read More