ஸ்ரீவி.,யில் தினேஷ்குண்டுராவ்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் காங்., வேட்பாளர் மாதவராவை ஆதரித்து அக்கட்சி தமிழக பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் பிரசாரம் செய்தார். காங்.,வேட்பாளர் மாதவராவ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ,அவருக்காக அவரது மகள் திவ்யாராவ், கூட்டணி கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து காங்., தேசிய செயலர் தினேஷ்குண்டுராவ் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: மாதவராவ் சிகிச்சையிலிருந்தாலும் கூட்டணி கட்சியினர் உற்சாகத்துடன் பணியாற்றுவது வெற்றியை உறுதி செய்துள்ளதை பார்க்கமுடிகிறது ,என்றார்.இந்திய கம்யூ., முன்னாள் எம்.பி.,அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,ராமசாமி, மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் செல்வமணி, ஒன்றிய தலைவர் மல்லிஆறுமுகம், காங்., மாவட்ட தலைவர் ரெங்கசாமி பங்கேற்றனர்.

Read More

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த பங்குனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதற்காக நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறை மலையடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னர் பக்தர்களை மலையேற அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம், ஓடைகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் மலையேறினர். மாலையில் கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் பிரதோஷ வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Read More

முடங்கி கிடக்கும் கூட்டுறவு நூற்பாலை வேலையின்றி வெளியூர் செல்லும் ஸ்ரீவி.,தொழிலாளர்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் கூட்டுறவு நுாற்பாலையால் போதிய வேலைவாய்ப்பின்றி ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியூர்களில் வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். தேர்தல் தோறும் அரசியல்வாதிகள் வாக்குறுதி கொடுத்தாலும் வெற்றிக்கு பின் கண்டுகொள்வதில்லை. இதே வாக்குறுதி இந்த தேர்தலிலும் தொடரதான் செய்கிறது.ஸ்ரீவில்லிபுத்துாரில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட கூட்டுறவு நுாற்பாலை மதுரை ரோட்டில் இயங்கி வந்தது. உள்ளூரை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாக வேலை வாய்ப்பு பெற்றனர். இதனால் நகரின் கல்வி, பொருளாதாரம் உயர்ந்து காணப்பட்டது.நிர்வாக காரணங்களால் 15 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவு நுாற்பாலை மூடபட்டது. இதனால் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வேலைவாய்ப்பை இழந்து பெரும் சிரமத்தை சந்தித்தது. மூடப்பட்ட மில்லை மீண்டும் திறக்ககோரி பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இன்று வரை மில் திறக்கப்படாமல் உள்ளது. தேர்தல்களின்போது அரசியல்வாதிகள்…

Read More

நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பங்குனி பவுர்ணமி வழிபாட்டிற்காக நாளை (மார்ச் 26) முதல் மார்ச் 29 வரை 4 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவசியம் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்யவேண்டும். வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப் படுவதால் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.இரவில் மலையில் தங்குவதற்கு அனுமதி கிடையாது போன்ற கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மருத்துவமனையில் வேட்பாளர்; தந்தைக்காக மகள் பிரசாரம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இவருக்கு ஆதரவாக அவரது மகள் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இரவது மகளான சென்னையை சேர்ந்த திவ்யாராவ் 33,தந்தை மருத்துவமனையில் இருந்தாலும் அவரது பிரசாரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில், அவர் இல்லாத குறையை நிறைவேற்றி வருகிறார். தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

Read More

ஸ்ரீவி.,யில் சிக்கிய ரூ.3.21 கோடி விடுவிக்க வருமானவரி அனுமதி

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில வேனில் கொண்டுவரபட்டு பிடிபட்ட ரூ.3.21 கோடி குறித்த விசாரணையில், வங்கிகளின் பணம் என்பது தெரியவர அதை விடுவிக்க வருமானவரித்துறை அனுமதியளித்துள்ளது. மார்ச் 17ல் ஸ்ரீவில்லிபுத்துாரில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் கண்ணன் தலைமையிலான குழுவினர் வாகன கண்காணிப்பில் மதுரையிலிருந்து வந்த வங்கி ஏ.டி.எம்.களில் பணம் வைக்கும் குழு வேனில் உரிய ஆவணமின்றி ரூ.3.21 கோடி கொண்டு வரபட்டது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.வருமானவரித்துறையினர் அன்றிரவே ஸ்ரீவி., வந்து விசாரித்தனர். ஸ்டேட் பாங்க், கனரா பேங்க் உயரதிகாரிகள் விளக்கமளித்ததையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப ஒப்படைக்க வருமானவரித்துறை அனுமதி அளித்துள்ளது.

Read More

ஸ்ரீவில்லிபுத்துாரில் ரூ.3.21 கோடி பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் வாகனசோதனையின் போது உரிய ஆவணங்களின்றி வேனில் கொண்டு வரபட்ட ரூ.3.21 கோடியை அதிகாரிகள் கைப்பற்றினர். ஸ்ரீவி.,தொகுதி நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் கண்ணன் ,எஸ்.ஐ.,இலக்கியமுத்து குழுவினர் கொல்லம் நெடுஞ்சாலையில் நேற்று மாலை 4:00 மணிக்கு வாகன தணிக்கை செய்தனர்.விருதுநகரிலிருந்து ஏ.டி.எம்.களில் பணம் வைக்க சென்ற வேனை சோதனையிட்டதில் ரூ.3.21 கோடி இருந்தது . ரூ.20 லட்சத்திற்கு மட்டுமே ஆவணங்கள் இருந்துள்ளது. ரூ. 3 கோடியே ஒரு லட்சத்திற்கு உரிய ஆவணங்களில்லை.ரூ.3.1 கோடியை பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்துார் சார்கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Read More

மாட்டு வண்டியில் பயணித்த கலெக்டர்

வத்திராயிருப்பு : நுாறுசதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி வத்திராயிருப்பில் கலெக்டர் கண்ணன் மாட்டுவண்டியில் பயணித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதை முன்னிட்டு வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சியில் இயந்திரங்களில் மின்னணு ஓட்டுபதிவு செய்யும் முறை குறித்து விளக்கமளிக்கபட்டது. மகளிர் சுய உதவிக் குழுவினரால் வரையபட்ட வரைபடங்களை பார்வையிட்டார். கலெக்டருக்கு தேர்தல் ராக்கி அணிவிக்கபட்டது. மாட்டுவண்டியில் பயணித்து வாக்காளர்களை நேரில் சந்தித்து நுாறுசதவீத ஓட்டுபதிவிற்கான அழைப்பிதழை வழங்கினார். டி.ஆர்.ஓ., மங்கள ராமசுப்பிர மணியன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மகளிர் திட்ட அலுவலர் தனபதி, உதவி திட்ட அலுவலர்கள் கிேஷார், வசுமதி, வளர்மதி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் கண்ணன், சிவ அருணாச்சலம், அன்பழகன், பி.டி.ஓ.,க்கள் திருநாவுக்கரசி, சீனிவாசன் பங்கேற்றனர்.

Read More

ஸ்ரீவி.,தொகுதி-காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பயோடேட்டா

ஸ்ரீவில்லிபுத்துார் பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ் – காங்கிரஸ் வயது: 64 படிப்பு: எம்.ஏ.,பி.எல்., எம்.பி.ஏ., தொழில்: வழக்கறிஞர், அரசியல். குடும்பம்: மனைவி (காலமானார்), மகள், அரசியல் அனுபவம்: 1986 முதல் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். கிடைத்தது எப்படி: ஒவ்வொரு தேர்தலின் போதும் வாய்ப்பு கேட்பது வழக்கம். கிடைக்கவில்லை என்றாலும் சோர்வடையாமல் கட்சி பணியில் கவனம் செலுத்துவார். உழைப்பு, விசுவாசத்திற்கு கிடைத்தது.

Read More

போலீஸ் ஸ்டேஷனில் மாயமான வாக்கிடாக்கி

ஸ்ரீவில்லிபுத்துார்- ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷனிலிருந்த வாக்கிடாக்கி மாயமான நிலையில் எஸ்.பி.,பெருமாள் விசாரணை நடத்தினார்.இங்கு தகவல் தொடர்பிற்காக 10 வாக்கிடாக்கிகள் இருந்தது. ஸ்டேஷனில் நடந்த ஆய்வின்போது ஒருவாக்கி டாக்கி குறைந்து 9 மட்டுமே இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த போலீசார் ஸ்டேஷன் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. எப்போது தொலைந்தது, எப்படி தொலைந்தது, பாதுகாப்பு பணிக்காக வாங்கியவர்கள் திரும்ப ஒப்படைக்கவில்லையா, டிரான்ஸ்பராகி சென்ற இன்ஸ்பெக்டர்கள் ஒப்படைக்காமல் மறந்து கொண்டு சென்றுவிட்டார்களா என போலீசார் புலம்புகின்றனர். விருதுநகர் எஸ்.பி.,பெருமாளும் விசாரணை நடத்தினார்.

Read More